Thursday 23 August 2012


பொதுத்தேர்வுகளில் மதிப்பெண் குறைந்தால் ஆசிரியர்கள் தான் பொறுப்பு:

  பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், பொதுத்தேர்வில் 60 சதவீதத்திற்கும் குறைவான மதிப்பெண் எடுத்தால், அதற்கான உரிய காரணங்களை, ஆசிரியர்கள் கல்வித்துறைக்கு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
   கடந்த ஆண்டு பொதுத்தேர்வுகளில், மாணவர்கள் 60
சதவீதத்துக்கும் குறைவாக தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இதற்கான சரியான காரணங்களை ஆசிரியர்கள் கோர வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை சார்பில் விளக்கம் கேட்டு பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது

  நோட்டீஸ் அனுப்பப்பட்ட ஆசிரியர்களுக்கு, கருத்து அளிக்கும் கூட்டம் விரைவில் நடத்தப்பட உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல், வரும் காலங்களில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறைந்தால், அதற்கான தகுந்த விளக்கங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு விளக்கம் அளிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று கல்வித்துறை தெரிவிள்ளது.




No comments:

Post a Comment