Monday 20 August 2012


கல்வி உரிமைச் சட்டத்தை கேலி செய்யும் நிர்வாகங்கள்:

கல்வி உரிமைச் சட்டத்தில் உள்ள குறைபாடுகளை கல்வியாளர்கள் மட்டுமல்லாமல் சென்னை உயர்நீதிமன்றமும் சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளது. அந்தக் குறைபாடுகளைக் களைந்து, சட்டத்தை முழுமையாக்குவதற்கான போராட்டங்கள் தேவைப்படுகின்றன. அதே வேளையில், தனியார்
நிர்வாகங்களுக்குச் சாதகமாகவே இருக்கிற இந்தச் சட்டத்தைக் கூட ஏற்றுக்கொள்ள தனியார் நிர்வாகங்கள் தயாராக இல்லை. தமிழகத்தைச் சேர்ந்த பல கல்வி வணிக நிறுவனங்கள் சட்டத்தை எதிர்த்து நீதி மன்றம் சென்றன. கர்நாடக மாநிலத்தில் தனியார் நிறுவனங்கள் கதவடைப்பு நடத்தியுள்ளன.


இவர்களது எதிர்ப்புக்கு மிக முக்கியமான காரணம், பொருளாதார ரீதியாகவும், சமூகரீதியாகவும் பின்னுக்குத் தள்ளப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளை 25 விழுக்காடு வரையில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற விதிதான். அந்தக் குழந்தைகளுக்கான கல்விக் கட்டண மானிய ஏற்பாடு இருந்தும் தனியார் நிர்வாகங்கள் ஏன் எதிர்க்க வேண்டும்? தனியார் பள்ளி முதலீட்டாளர்கள், அந்தக் குழந்தைகளைச் சேர்த்தால் மற்ற குழந்தைகளின் நடத்தை சீர் குலையும் என்று கூசாமல் சொல்கிறார்கள்.

இத்தகைய வாதங்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த பிறகும் பல தனியார் நிர்வாகங்கள் மாறவில்லை என்பதற்கு சாட்சியம்தான் பெங்களூரு நகரின் ஒரு பள்ளியில் நிகழ்ந்துள்ள கொடுமை. இட ஒதுக்கீடு அடிப்படையில் சேர்க் கப்பட்ட நான்கு குழந்தைகளின் தலைமுடி யைக் கொத்தாக வெட்டி, அவர்களைத் தனியாக அடையாளப்படுத்தியுள்ளனர். வகுப்பறையில் அந்தக் குழந்தைகளுக்குக் கடைசி வரிசையில் தான் இடம். அவர்கள் கொண்டுவரக்கூடிய உணவுகள் பள்ளி நுழைவாயிலில் சோதனை செய்யப் படுகின்றன. பள்ளியின் வருகைப்பதிவேட்டிலேயே அவர்களுடைய பெயர் பதிவு செய்யப்படவில்லை! இதன் அர்த்தம் தெளிவானது: ‘கட்டணம் செலுத் திப் படிக்க வசதி இல்லாத, ஒதுக்கப்பட்ட சமூகங்களின் குழந்தைகள்தானே, அவர்கள் எக்கேடுகெட்டால் நமக்கென்னஎன்ற மனநிலைதான் அந்த அர்த்தம்.

இது ஒரு பெங்களூரு நகரின், ஒரு குறிப்பிட்ட பள்ளி சம்பந்தப்பட்ட விவகாரம் மட்டுமேயல்ல. நாடு முழுவதுமே ஆகப்பெரும்பாலான தனியார் நிர்வாகங்கள் கல்வி உரிமைச் சட்டத்தை வேண்டா வெறுப்போடுதான் ஏற்றுள்ளன. ஆகவே, சட்டத்தைக் கொண்டுவந்த மத்திய அரசுக்கும், அதனைச் செயல்படுத்துகிற மாநில அரசுகளுக்கும் அதன் விதிகள் பின்பற்றப்படுகின்றனவா என்று ஆராய்ந்து, கறாராகப் பின்பற்றச் செய்கிற பொறுப்பு இருக்கிறது.

சில தனியார்நிர்வாகங்கள், அருகமைப் பகுதிகள் என்பதற்கான வரையறைகளில் உள்ள குழப்பங்களைப் பயன்படுத்தி, அந்த வரையறைக்கு உட்பட்ட பகுதிகளில், இட ஒதுக்கீட்டிற்குரிய குடும்பங்கள் இல்லை என்று கூறி நழுவியுள்ளன. சில நிர்வாகங்களோ, அருகமைப் பகுதி என்பதற்காகத் தங்களது பள்ளியில்தான் சேர்க்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று பல சேர்க்கை விண்ணப்பங்களை நிரா கரித்துள்ளன. ஆகவே, சட்டத்தில் உள்ள இப் படிப்பட்ட குறைபாடுகள் அனைத்தையும் கண் டறிந்து, குழப்பத்திற்கும் நழுவல்களுக்கும் இட மில்லாமல் செய்வது அவசியம். இன்னொரு பக் கம், மிக அடிப்படையாக அரசுப்பள்ளிகளை அனைத்துப் பகுதிகளிலும் விரிவுபடுத்தி, உள் கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து அம்சங்களி லும் அவற்றை வலுப்படுத்துவதோடும் இந்த நடவடிக்கைகள் இணைய வேண்டும்.



No comments:

Post a Comment