Saturday 29 September 2012

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கணினி பாடம் நடத்த உத்தரவு



                               மாற்றுத்திறனாளி மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, தர்மபுரி அரசு மேல்நிலைப் பள்ளியில், கணினி அறிவியல் பாடம் நடத்தப்படும் என, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அரசு செயலர், கண்ணகி பாக்கியநாதன் தெரிவித்தார். தர்மபுரி அரசு மேல்நிலைப் பள்ளி நிர்வாகம், பிளஸ் 1 வகுப்பில் படிக்கும்
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, சிறப்பு கணினி அறிவியல் பாடம் நடத்துவதை, திடீரென நிறுத்தியது. அங்கு பயிலும், புவனேஸ்வரி என்ற மாணவியின் தந்தை, மீண்டும், கணினி அறிவியல் பாடம் நடத்தக் கோரி, உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
                        வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, பாடத்தைத் தொடர உத்தரவிட்டது. இதையடுத்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கமிஷனர், பள்ளி நிர்வாகத்திற்கு, கணினி அறிவியல் பயில, விருப்பக் கடிதம் அளிக்கும் மாணவர்களுக்கு, பாடம் நடத்த உத்தரவிட்டார். தர்மபுரி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும், 23 மாற்றுத்திறனாளி மாணவர்களில், 20 பேர், சிறப்பு கணினி அறிவியல் பாடம் நடத்துவதற்கு விருப்ப கடிதம் கொடுத்தனர்.
                      மாணவர்களின் விருப்ப கடிதத்தை பெற்ற பள்ளி நிர்வாகம், மாணவர்களின் நிலை குறித்து, மாற்றுத்திறனாளி நலத்துறைக்கு தெரியப்படுத்தியதுஇதுகுறித்து, மாற்றுத்திறனாளி நலத்துறை செயலர், கண்ணகி பாக்கியநாதன் கூறுகையில், பெரும்பான்மையான மாணவர்களின் விருப்பத்திற்கு இணங்க, தர்மபுரி அரசு மேல்நிலைப் பள்ளியில், இனி சிறப்பு கணினி அறிவியல் பாடம் நடத்தப்படும், என்றார்.

No comments:

Post a Comment