Saturday 27 October 2012

ஆசிரியர் தகுதி தேர்வு கீ ஆன்சரில் பிழை: 400 பேர் புகார்



           ஆசிரியர் தகுதி தேர்வு கீ ஆன்சரில் உள்ள பிழைகள் மீது 400 பேர் புகார் தெரிவித்துள்ளனர். அவற்றை விசாரிக்க வல்லுனர் குழு அமைக்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இரண்டாவது முறையாக கடந்த 14ம் தேதி ஆசிரியர் தகுதி தேர்வு நடந்தது. இந்த தேர்வில் முதல் தாளில் 2 லட்சத்து 74 ஆயிரத்து 412 பேரும், இரண்டாம் தாளில் 3 லட்சத்து 73 ஆயிரத்து 797
பேரும் எழுதினர்.
       தேர்வுக்கான கீ ஆன்சரை 20ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. அதில் இருந்த குளறுடிகளால் தேர்வு எழுதியவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கேள்வித்தாள் , பி, சி, டி என நான்கு வரிசையில் அச்சிட்டு வழங்கினர். கேள்விகள் சரியாக மொழி மாற்றம் செய்யப்படவில்லை. பாடத்திட்டத்தை மீறி பிளஸ்1, பிளஸ் 2வகுப்பு பாடங்களில் இருந்தும் கேள்விகள் இடம் பெற்று இருந்தன. குறிப்பாக வரிசை டி கேள்வித்தாளில் இடம் பெற்ற குழந்தை மேம்பாடும் உளவியலும் பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளில் 2, 4, 11, 21, ஆகிய கேள்விகள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டு இருந்தன. தமிழ் பாடத்தில், கேட்கப்பட்ட கேள்விகள் 32, 33, 35, 42, 45, 55 ஆகியவை பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தமிழ்ப் புத்தகங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. கணக்கு மற்றும் அறிவியல் பகுதியில் கேள்விகளில், 116, 149,91, 98, 102, 104, 105, 131, 132, 135, ஆகியவையும், சமூக அறிவியலில் இடம் பெற்ற கேள்விகள் 96, 104, 126, 132, 133, ஆகியவை பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு புத்தகங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன.
           கீ  ஆன்சர் மீது ஒரு வாரத்தில் கருத்து தெரிவிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து இருந்ததின் பேரில் இதுவரை 400 பேர் குறைகளை சுட்டிக்காட்டி மனு கொடுத்துள்ளனர். இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தவும், பட்டதாரிகள் கூறியுள்ள பிழைகள் தொடர்பாக ஆய்வு செய்யவும் பாட வல்லுநர்கள் குழுக்கள் அமைக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. இந்த முறையும் பட்டதாரிகள் நீதிமன்றதுக்கு செல்ல முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே முதுநிலை பட்டதாரிகளை தேர்வு செய்தது சரியில்லை என்று முதுநிலை பட்டதாரிகள் நீதிமன்றத்துக்கு சென்றதால் பணிநியமன பட்டியல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment