Tuesday 30 October 2012

காற்றின் வேகத்தை சொல்லும் கணக்கு


கடலில் மீன் பிடிக்கும் படகு ஓட்டிகள் மற்றும் கப்பல் மாலுமிகளுக்கு புரியும் வகையில், அந்தந்த துறைமுகங்களில், எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படுகின்றன. இதன் மூலம், காற்றின் வேகத்தை புரிந்து கொண்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனபுயல் எச்சரிக்கை கூண்டு எண்.1 முதல் 2 வரை, புயல் தொலை தூரத்தில் இருப்பதை குறிக்கிறது. கூண்டு எண்.3, துறைமுகங்களில் வழக்கத்தை விட அதிகமாக காற்று வீசுவதை குறிக்கிறது. புயல் எச்சரிக்கை கூண்டு எண்.4, கடலில் புயல் உருவாகியுள்ளதை குறிக்கிறது. பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள போதிய நேரமிருப்பதை உணர்த்துகிறது.புயல் எச்சரிக்கை கூண்டு எண்.5, 6, 7 வரை, புயல் தீவிரமடையாததை குறிக்கிறது. மேலும், மணிக்கு, 80 கி.மீ., வேகத்தில் காற்று வீசுவதை தெரிவிக்கிறது.புயல் எச்சரிக்கை கூண்டு எண். 8, 9, 10 வரை, பெருத்த அபாய எச்சரிக்கை, மணிக்கு 120 முதல் 135 கி.மீ., வேகத்தில் காற்று வீசுவதை அறிவிக்கிறது.

No comments:

Post a Comment