Thursday 29 November 2012

திண்டுக்கல்லில் புத்தகத் திருவிழா: நவ. 30-ல் ஆரம்பம்



                                      திண்டுக்கல்லில் முதல் புத்தகத் திருவிழா நவ. 30-ம் தேதி துவங்குகிறது.  திண்டுக்கல் இலக்கியக் களம் மற்றும் திண்டுக்கல்லைச் சேர்ந்த கல்வி நிறுவனங்கள் இணைந்து, டட்லி மேல்நிலைப் பள்ளி தமிழ்த் தாத்தா .வே.சா. அரங்கில் இந்த புத்தகத் திருவிழாவை நடத்துகின்றனடிச. 9-ம் தேதி வரை நடைபெறும் இந்த புத்தகத் திருவிழா குறித்து, இலக்கியக் களத் தலைவர் பேராசிரியை மு. குருவம்மாள் செய்தியாளர்களிடம்
கூறியதாவது: திண்டுக்கல்லில் நடைபெற உள்ள முதல் புத்தகத் திருவிழாவில், தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கத்தின் சார்பில் 49 பதிப்பகங்களைச் சேர்ந்தவர்கள் 1 லட்சம் தலைப்புகளில் பல லட்சம் புத்தகங்களை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.இதற்காக, 71 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 10 அரங்குகளில் ஆங்கிலப் புத்தகங்கள், 5 அரங்குகளில் சி.டி.க்கள், 56 அரங்குகளில் ஆங்கிலம், தமிழ், கணிப்பொறி, இலக்கியம், பண்பாடு, சமூகம், விஞ்ஞானப் புத்தகங்களும், சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையிலான புத்தகங்கள், குழந்தைகளுக்குப் பரிசு பொருளாக வழங்கும் வகையிலான புத்தகங்கள் உள்ளிட்டவை விற்பனைக்கு வரவுள்ளன.காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையில் நாள்தோறும் நடைபெறும் இத்திருவிழாவில், மாலை நேரத்தில் கலை நிகழ்ச்சிகளும், அறிஞர்களின் சிறப்புரைகளும் நடைபெறும்நவ. 30-ம் தேதி மாலை 6 மணிக்கு புத்தகக் கண்காட்சியை, குன்னூர் இன்கோசெர்வ் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் . உதயசந்திரன் திறந்து வைத்துப் பேசுகிறார். சென்னை காவல்துறை கூடுதல் இயக்குநர் டி. ராதாகிருஷ்ணன் முதல் விற்பனையைத் துவக்கி வைக்கிறார்.டிச.1-ம் தேதி மாலையில் நடைபெறும் நிகழ்ச்சியில், திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் . பாரி புத்தகம் பேசுமா என்ற தலைப்பிலும், டிச. 2-ம் தேதி வாசிப்பே வாழ்க்கையாக என்ற தலைப்பில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் என். நன்மாறன், எழுதுகோல் தெய்வம், இந்த எழுத்தும் தெய்வம் என்ற தலைப்பில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், டிச. 3-ம் தேதி புதுவாழ்வு வேண்டில் புத்தகசாலை வேண்டும் என்ற தலைப்பில் தமிழருவி மணியன், டிச. 4-ம் தேதி அறிவுக் கதவை சரியாய் திறந்தால் என்ற தலைப்பில் மதுக்கூர் ராமலிங்கம், டிச. 5-ம் தேதி எழுத்தும் எழுச்சியும் என்ற தலைப்பில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத் தலைவர் . தமிழ்ச்செல்வன், புத்தகமே போர்வாள் என்ற தலைப்பில் ஈரோடு மக்கள் சிந்தனை பேரவைத் தலைவர் . ஸ்டாலின் குணசேகரன், ஊருக்கு நல்லது சொல்வேன் என்ற தலைப்பில் திரைப்பட இயக்குநர் பாலாஜி சக்திவேல், டிச. 6-ம் தேதி வாசிப்பின் சுவை என்ற பொருளில் சென்னை கனிமவள நிறுவன இயக்குநர் மா. வள்ளலார், அறியாமை விலக என்ற பொருளில் பேராசிரியர் சாலமன் பாப்பையா, எண்முவது உயர்வு என்ற பொருளில் திரைப்பட இயக்குநர் எஸ்.எஸ். ஸ்டான்லி, டிச. 7-ம் தேதி தமிழக அரசின் இலக்கிய விருது, தினமணி-நெய்வேலி சிறுகதை பரிசுப் போட்டியில் வென்றவர்களைப் பாராட்டி, காவல் கோட்டம் எழுத்தாளர் சாகித்ய விருது பெற்ற சு. வெங்கடேசன் பெரிதினும் பெரிது கேள் என்ற பொருளிலும், டிச. 8-ம் தேதி உலகம் தெரியும் படிப்பாலே என்ற பொருளில் கோவை புதூர் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 4-வது அணித் தலைவர் தளவாய் பா. மூர்த்தி, நித்தம் ஒரு புத்தகம் என்ற பொருளில் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் ஆகியோர் பேசுகின்றனர்.  டிச. 9-ம் தேதி நிறைவு விழாவில், மாவட்ட ஆட்சியர் . வெங்கடாசலம் தலைமையில், சட்டப்பேரவை உறுப்பினர் கே. பாலபாரதி, நகர்மன்றத் தலைவர் வி. மருதராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். மாநில மின்துறை அமைச்சர் நத்தம் இரா. விசுவநாதன் விழா நிறைவுரை ஆற்ற உள்ளார்.நூல்கள் வாங்க வங்கி மூலம்கடன் உதவி-ஆட்சியர்திண்டுக்கல், நவ. 27: திண்டுக்கல்லில் நடைபெற உள்ள புத்தகத் திருவிழாவில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நூல்களை வாங்குவதற்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் உதவி வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் .வெங்கடாசலம் கேட்டுக் கொண்டுள்ளார்இது குறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கை: திண்டுக்கல் இலக்கியக்களம் சார்பில், டட்லி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் இந்த புத்தகத் திருவிழா நடத்தப்பட உள்ளது.இந்த கண்காட்சி விற்பனையில் தமிழகத்தின் முன்னணி புத்தகப் பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் ஆயிரக்கணக்கான தலைப்புகளில், லட்சக்கணக்கான புத்தகங்களை காட்சிப்படுத்த உள்ளனர். சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமான கலை, இலக்கியம், சமூகம், ஆன்மிகம், அறிவியல் புத்தகங்கள், குறுந்தகடுகள் ஒரே இடத்தில் விற்பனைக்கு கிடைக்கும்.மனிதனை மனிதனாக உருவாக்குவது புத்தகங்களே. சிறந்த சமுதாயம் அமைவதற்கும் புத்தகங்கள் உறுதுணையாக இருந்து வருகிறது. எனவே இந்த புத்தகத் திருவிழாவில் மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வி நிலையங்கள் என சமூகத்தின் அனைத்து பிரிவினரும் பங்கேற்று பெருமளவில் புத்தகங்களை வாங்கிப் பயனடைய வேண்டும் என ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment