Sunday 25 November 2012

"கிராம பகுதிகளில் இடைநிற்கும் மாணவர்கள் அதிகரிப்பு



                          கட்டாயக்கல்வி சட்டம் அமல்படுத்தி, இரண்டாண்டுகளாகியும், பள்ளியில் இடைநிற்கும், மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. தீவிர நடவடிக்கை இல்லாததால், கிராமப்பகுதிகளில் இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அனைவருக்கும் கல்வி இயக்கக அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
              தமிழகத்தில்,2010, ஆகஸ்ட் மாதத்தில் 
கட்டாயக்கல்வி சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதுஇதன் அடிப்படையில்ஒன்றாம் வகுப்புமுதல்எட்டாம் வகுப்பு வரைஅனைவரும் கல்வி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொதுவாகபள்ளிகளில் ஒன்று முதல்எட்டாம் வகுப்பு வரைபடிக்கும், 10 சதவீதம் மாணவர்கள் இடைநிற்கும் நிலை உள்ளது.இதை மறைத்துபெரும்பாலான பள்ளிகளில்புள்ளி விவரங்கள் தயாரிக்கப்படுகிறதுகட்டாயக் கல்விசட்டத்தில்இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கையே  இருக்கக்கூடாது எனவும்இதற்காகமாநிலஅரசு பல்வேறு நடவடிக்கைகளை  எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரைகடந்த சில ஆண்டுகளுக்கு முன்அனைவருக்கும்  கல்வி இயக்கத்தின்சார்பில்அனைவரையும் பள்ளியில் சேர்ப்பதற்கான  பிரச்சாரம்,"பிரிட்ஜ் கோர்ஸ்மையங்கள் எனபல்விதசெயல்பாடுகள் இருந்தனதற்போதுஅவையும் செயல்படுத்தப்படுவதில்லைஇதனால்கிராமப்பகுதிகளில்,இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கைநாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதுஇவற்றை தடுத்துநிறுத்தவும்அனைவருக்கும் கல்வி வழங்கவும்தீவிர  நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனகோரிக்கைஎழுந்துள்ளது.
இதுகுறித்துஅனைவருக்கும் கல்வி இயக்கக அலுவலர் ஒருவர் கூறியதாவது: அனைவருக்கும் கல்விஇயக்ககத்தின் கீழ்அனைத்து மாணவர்களையும்பள்ளிகளில் சேர்ப்பதற்கானபல்வேறு செயல்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.பள்ளியில்இடைநிற்கும் மாணவர் எண்ணிக்கை  அதிகமாக உள்ள பகுதிகளில்சிறப்பு பயிற்சி மையங்கள்அமைக்கப்பட்டுள்ளனஇங்குமூன்று மாதம் வரை பயிற்சி வழங்கிஅந்தந்த வயதுக்குரிய வகுப்புகளில்மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.பல குழந்தைகளைபெற்றோரே பள்ளிக்கு  அனுப்பாமல்விவசாயம் உட்படபல்வேறு பணிகளுக்கு அனுப்பிவிடுகின்றனர்கலெக்டரிடம் புகார் கொடுத்துபோலீஸ் மூலம் மிரட்டிஇடைநின்ற மாணவனை பள்ளிக்குவரவழைத்தாலும்ஒரு சில நாட்கள் மட்டுமே வருகின்றனர்இதனால்இடைநிற்கும் மாணவர்களின்எண்ணிக்கையை குறைக்க முடியாத நிலை  உள்ளது.
உயர்அதிகாரிகள் கண்டிப்பார்களோ என்ற பயத்தில்ஆசிரியர்களும்தலைமை  ஆசிரியர்களும்இடைநிற்கும் மாணவர் எண்ணிக்கையை மறைத்து விடுகின்றனர்இடையில் நிற்கும் மாணவன்தனியார்பள்ளியில் சேர்ந்து விட்டதாகவோவேறு ஊருக்கு மாறுதல் பெற்றுச் சென்றதாகவோகணக்கு காட்டிவிடுகின்றனர்தீவிர  நடவடிக்கை இல்லாததால்கிராமப்பகுதிகளில் இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதுஇவ்வாறுஅவர் கூறினார்.

No comments:

Post a Comment