Thursday 22 November 2012

புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அகில இந்திய அளவில் வேலை நிறுத்தம்



                        தொழிலாளர்களின் கோரிக்கையை அடுத்த ஆண்டு மே 31ம் தேதிக்குள் நிறைவேற்றாவிட்டால், அகில இந்திய அளவில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்என்று ரயில்வே தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது. 19 அம்ச கோரிக்கை களை வலியுறுத்திசென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம் முன்பு தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்ஆர்எம்யூ) சார்பில் நேற்று 12 மணி நேர உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
                           பொது செயலாளர் என்.கண்ணையா
தலைமை தாங்கினார். தலைவர் ராஜா ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்கண்ணையா அளித்த பேட்டிரயில்வே துறையில் டிரைவர்கள், கார்டுகள், நிலைய அதிகாரிகள், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், டிராக் மெயின்டெய்னர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரிவுகள் மற்றும் கமர்ஷியல், முன்பதிவு, டிக்கெட் செக்கிங் பிரிவுகள் என 2 லட்சம் காலி பணி இடங்கள் உள்ளன. இவற்றை உடனடியாக நிரப்ப வேண்டும்.புதிய ரயில்களை அறிவிக்கும் போது தேவையான பெட்டிகளை சேர்க்க வேண்டும், பராமரிப்புக்கு பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
                வாரிசுகள் வேலை பெற 20 சதவீத ஒதுக்கீட்டை வழங்க வேண்டும். உச்சவரம்பில்லா போனஸ் வழங்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். எங்களுடைய கோரிக்கைகளை ரயில்வே அமைச்சகம் அடுத்த ஆண்டு மே 31ம் தேதிக்குள் நிறைவேற்றவில்லை என்றால், அகில இந்திய அளவில் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment