Sunday 27 January 2013

9 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கு போதிக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் மற்றும் புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிப்ரவரி 1 முதல் பயிற்சி



            தமிழகத்தில், 9 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கு போதிக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரிய, ஆசிரியைகளுக்கு 311 மையங்களில்  வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் 23ம்
தேதி வரை பயிற்சி நடக்கிறது. தமிழகத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 29 ஆயிரத்து 176 பட்டதாரி  ஆசிரியர்கள் புதியதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அனைவருக்கும்  இடைநிலை கல்வி திட்டம் சார்பில் முதற்கட்டமாக கடந்த 19 மற்றும் 20ம் தேதிகளில் அனைத்து மாவட்டங்களிலும் பொதுவான பயிற்சி நடந்தது. தற்போது 2ம் கட்டமாக பாட வாரியாக அனைத்து  மாவட்டங்களிலும் நான்கு நாட்கள் பயிற்சி முகாம் நடக்கிறது. தமிழ் பாட ஆசிரியர்களுக்கு வரும் பிப்ரவரி மாதம் 6,7,18 மற்றும் 19ம் தேதிகளிலும்ஆங்கில பாடத்தில் பிப்ரவரி மாதம் 8, 9, 20 மற்றும் 21ம் தேதிகளிலும், கணித பாடத்தில் பிப்ரவரி மாதம் 4, 5, 15 மற்றும் 16ம் தேதிகளிலும் இப்பயிற்சி நடக்கிறது.
                      
அறிவியல் பாடத்தில் பிப்ரவரி மாதம் 1, 2, 13 மற்றும் 14ம் தேதிகளிலும், சமூக அறிவியல் பாடத்தில் பிப்ரவரி மாதம் 11, 12, 22  மற்றும் 23ம் தேதிகளிலும் இப்பயிற்சி நடக்கிறது. வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் 23ம் தேதி வரை இப்பயிற்சி நடக்கிறதுஇதில் தமிழ் பாடத்தில் 6,950 ஆசிரியர்களுக்கு 71 மையங்கள், ஆங்கில பாடத்தில் 2,256 பேருக்கு 33 மையங்கள், கணித பாடத்தில் 7,564 பேருக்கு 78 மையங்கள், சமூக அறிவியல் பாடத்தில் 7,848 பேருக்கு 80
மையங்கள், அறிவியல் பாடத்தில் 4,558 பேருக்கு 49 மையங்களில் இப்பயிற்சி அளிக்கப்படுகிறதுமொத்தம் 29 ஆயிரத்து 176 ஆசிரிய, ஆசிரியைகளுக்கு 311 மையங்களில் பயிற்சி நடக்கிறது.இப்பயிற்சிக்காக தமிழகத்தில் அனைத்து
மாவட்டங்களுக்கும் 2 கோடியே 39 லட்சத்து 10 ஆயிரத்து 880 ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது

No comments:

Post a Comment