Sunday 27 January 2013

பள்ளி மாணவ, மாணவிகள் விவரம் தலைமை ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்ய கூடாது தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை



                         பள்ளி மாணவ, மாணவிகளின் விவரங்களை தலைமை ஆசிரியர்களை கொண்டு பதிவேற்றம் செய்வதை கைவிட வேண்டும் என ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி
ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் முருக. செல்வராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் விவரத்தை பள்ளி தலைமை ஆசிரியர்களை கொண்டு பதிவேற்றம் செய்வதை கைவிட வேண்டும். தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் துப்புரவு பணியாளர், இரவு நேரக்காவலர், அலுவலக உதவியாளர் நியமிக்கப்பட வேண்டும். தொடக்க கல்வித் துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள ஒன்றிய, உதவி மற்றும் கூடுதல் தொடக்க கல்வி அலுவலக காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
               விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். வேலை நிறுத்த உரிமை, தொழிற்சங்க உரிமை வழங்க வேண்டும். வங்கி, இன்சூரன்ஸ் போன்ற பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் வரும் பிப்ரவரி 20, 21 ஆகிய தேதிகளில் 48 மணி நேர பொதுவேலை நிறுத்தம் மேற்கொள்ள உள்ளது. இதில் தேசபக்த உணர்வோடு ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
.

No comments:

Post a Comment