Monday 28 January 2013

தமிழகத்திலுள்ள ஒவ்வொரு பள்ளியிலும் நலத்திட்ட ஆசிரியர் பணியிடம் வேண்டும் என தலைமை ஆசிரியர்கள் சங்கம் தீர்மானம்


தமிழகத்திலுள்ள ஒவ்வொரு பள்ளியிலும் நலத்திட்ட ஆசிரியர் பணியிடத்தை உருவாக்கவேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இச்சங்கத்தின் மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் வேலூர்
ஆசிரியர் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் டி. மனோகரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் புண்ணியகோட்டி, பொருளாளர் வேதக்கண்தனராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை 100 சதவீதம் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கவேண்டும். மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு புதிதாக மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை உருவாக்க வேண்டும்.
                               ஒவ்வொரு பள்ளிக்கும் தனியாக ஒரு நலத்திட்ட ஆசிரியர் பணியிடம் உருவாக்க வேண்டும். மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான அரசாணை 720-ல் திருத்தம் செய்யக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆசிரியர் முன்னேற்ற சங்கம் இதேபோல ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் வேலூர் முஸ்லிம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சிவராமன் தலைமை வகித்தார். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய நடைமுறையை கொண்டுவர வேண்டும், தொகுப்பூதியத்தில் பணிபுரியும் ஆசிரியர்களை கால முறை ஊதியம் பெறும் வகையில் மாற்றவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment