Thursday 24 January 2013

மாணவ, மாணவியரின் தொடரும் மரணங்கள்: மெட்ரிக் பள்ளி அதிகாரிகள் ஆலோசனை


தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர், அவ்வப்போது மரணம் அடைவதை தடுப்பது குறித்து, மெட்ரிக் பள்ளி இயக்குனரக அதிகாரிகள், ஆலோசனை நடத்தினர்தனியார் பள்ளிகளில், நீச்சல் குளங்கள் மற்றும் திறந்து கிடக்கும் கழிவு நீர் தொட்டிகளில் விழுந்து, அவ்வப்போது
குழந்தைகள் மரணம் அடைகின்றனர். பஸ்களில் அடிபட்டும், மாணவர்கள் இறக்கின்றனர். மாணவர் பாதுகாப்பு அம்சங்களை தனியார் பள்ளிகள், சரிவர கடைபிடிப்பது இல்லைசமீபத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை கிறிஸ்து மெட்ரிக் பள்ளியில், திறந்து கிடந்த கழிவு நீர் தொட்டியில் விழுந்து, மாணவி பலியானார். மாணவ, மாணவியர் பாதுகாப்பு கேள்விக் குறி ஆகி வரும் நிலையில், மெட்ரிக் பள்ளி அதிகாரிகள், நேற்று முன்தினம் மாலை, டி.பி.., வளாகத்தில் கூடி, ஆலோசனை நடத்தினர்
            இதில், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர். தனியார் பள்ளிகளை, தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், மாணவ, மாணவியருக்கான பாதுகாப்பு விதிமுறைகளை, 100 சதவீதம், பள்ளி நிர்வாகங்கள் அமல்படுத்துகிறதா என்பதையும், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும் எனவும், அதிகாரிகள் வலியுறுத்தினர்மெட்ரிக் பள்ளிகளை கண்காணிக்க, தற்போது, 15 ஆய்வாளர்கள் உள்ளனர். இதிலும், பல பணியிடங்கள் காலியாக உள்ளன. மாவட்டத்திற்கு ஒரு ஆய்வாளர் வீதம், 32 ஆய்வாளர்களை நியமித்தால், பள்ளிகளை கண்காணிக்க முடியும் என, அதிகாரிகள் கருதுகின்றனர்.

No comments:

Post a Comment