Monday 25 March 2013

மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களுக்கு ஆதார் அட்டை



             தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தில் மீட்கப்பட்டு சிறப்பு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அரசின் உதவித்திட்டம் நேரடியாக வழங்கும் விதத்தில், ஆதார் அடையாள அட்டைகள் வழங்கப்பட
உள்ளன. குடும்ப வறுமை, இளம் வயதில் பெற்றோரை இழந்துவிடுதல் மற்றும் பல்வேறு சமூக, பொருளாதார சூழல்கள் காரணமாக குழந்தை தொழிலாளர்கள் உருவாகின்றனர். தொழில் வாய்ப்புகள் அதிகம் உள்ள கோவை, திருப்பூர் மாவட்டங்களில், குழந்தை தொழிலாளர்கள் அதிகளவில் உருவாகும் நிலை உள்ளது.
                               குழந்தைகளுக்கான தொடக்கக் கல்வி அடிப்படை உரிமைகளில் ஒன்றாகக் கருதப்பட்டு, கடந்த 2002ம் ஆண்டு அரசியலமைப்பு சட்டத்தில் தகுந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009ம் ஆண்டு மத்திய அரசால் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின்படி, ஆறு முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டாய கல்வி அளிக்க வேண்டும் என்ற அரசு குறிக்கோளின்படி, குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு, அவர்களுக்கு சிறப்பு பயிற்சி மையங்களில் கல்வி அளிக்கப்படுகிறதுநாட்டில் 260க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், தேசிய குழந்தை தொழிலாளர் மீட்பு மையங்கள், திட்ட இயக்குனர்கள் மேற்பார்வையில் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கோவை உட்பட 17 மாவட்டங்களில் இம்மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
                         நாடு முழுவதும் இம்மையங்கள் வாயிலாக மீட்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு, மாதந்தோறும் ஊக்கத் தொகையாக 150 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மாவட்ட கலெக்டர்கள் வாயிலாக வழங்கப்பட்டு வரும் இத்தொகை, வரும் நிதியாண்டில் இருந்து அந்தந்த பயனாளிகளின் சேமிப்புக் கணக்கில் நேரடியாக கிடைக்கும் விதத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுஏற்கனவே, ரேஷன் பொருள், காஸ் ஆகியவற்றுக்கான மத்திய அரசு மானியங்கள் பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கு வழியாக வழங்கும் திட்டத்தைப் போல், குழந்தை தொழிலாளர்களின் ஊக்கத் தொகையும் பயனாளிகளை தேடி, ஆன்லைனில் வர உள்ளது. இதற்காக, பயனாளிகளுக்கு ஆதார் அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன.
                               தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட, கோவை மாவட்ட இயக்குனர் விஜயகுமார் கூறுகையில், "கோவை மாவட்டத்தில் 25 சிறப்புப் பயிற்சி மையங்களில், 780 மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் தபால் அலுவலகங்கள் வாயிலாக, நேரடியாக மாதந்தோறும் ஊக்கத்தொகை கிடைக்கும் விதத்தில், ஆதார் அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளனஇதற்காக, இதுவரை 520 பேருக்கு தபால் அலுவலகங்களில் கணக்கு துவங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மாணவர்களுக்கும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன," என்றார்.

No comments:

Post a Comment