Tuesday 30 April 2013

பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் மோசமாக இருப்பதால், பாக்கெட் உணவுகளை வழங்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயும்படி மத்திய அரசுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு ஆலோசனை வழங்கியுள்ளது.



             டெல்லியில் பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவுகளை, மாநிலங்களவை உறுப்பினர் ஆஸ்கர் பெர்னான்டஸ் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு சமீபத்தில்
ஆய்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட தரம், சுத்தம் மதிய உணவில் இல்லை. இதையடுத்து, நிலைக்குழு தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: தலைநகர் டெல்லியிலேயே நிலைமை மோசமாக இருந்தால், கிராமப்புற பள்ளிகளில் மதிய உணவு எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை கற்பனை செய்து கொள்ளலாம். எனவே, சமைத்து வழங்கப்படும் மதிய உணவிற்கு பதில் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சத்தான உணவுப் பொருட்களை வழங்குவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் ஆராய வேண்டும்.
                                   
மேலும், மதிய உணவின் தரத்தை தொடர்ந்து கண்காணிக்க ஆசிரியர்கள் மற்றும் சமையல்காரர்களுக்கு உணவு மற்றும் ஊட்டசத்து வாரியம் பயிற்சி அளிக்க வேண்டும். மதிய உணவு வழங்கப்படும் பள்ளிகளில் உணவு பொருள் சேமிப்புடன் கூடிய சமையல் அறை கட்டுவதற்கான கெடு கடந்த மாதம் 31ம் தேதியுடன் முடிந்து விட்டது. கடந்த 2006,07 மற்றும் 2012,13ம் ஆண்டுகளில் 9.55 லட்சம் சமையலறையுடன் கூடிய உணவு பொருள் சேமிப்பு அறைகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. இதில் 63 சதவீதம் மட்டுமே முடிவடைந்துள்ளது. மீதமுள்ள சமையல் அறைகளை விரைவில் கட்ட மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
.

No comments:

Post a Comment