Tuesday 30 April 2013

பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கு மனுக்கள் பெறாததால் ஆசிரியர்கள் அதிருப்தி



              ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வுக்கு இந்த ஆண்டு பள்ளி கடைசி வேலை நாளில் மனுக்கள் பெறப்படவில்லை. இதனால் ஆசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர். பள்ளி தலைமை ஆசிரியர்கள்,
முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு, ஆண்டுதோறும் ஜூன் மாதம் நடத்தப்படும். பணியிட மாறுதல் கோரும் ஆசிரியர்களிடம் இருந்து, இடமாற்றம் கோருவது தொடர்பான மனுக்கள் ஆண்டுதோறும் கடைசி வேலை நாட்களில் பெறப்படுவது வழக்கம். மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கோரும் மனுக்கள், சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். இந்த ஆண்டு பள்ளிகளில் கடந்த ஏப்.20ம் தேதி கடைசிவேலை நாளில் இடமாறுதல் கோரும் மனுக்கள் பெறப்படும் என ஆசிரியர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், மனுக்கள் பெற உத்தரவு இல்லாததால் ஏமாற்றத்துடன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். இடைப்பட்ட விடுமுறை நாட்களில் அரசிடமிருந்து அறிவிப்பு வரும் பட்சத்தில், சொந்த ஊர் சென்ற ஆசிரியர்கள் இடமாறுதல் மனு அளிக்க பள்ளிகளுக்கு வரவேண்டியிருக்கும். மேலும் இந்த ஆண்டு மனுக்கள் பெறாத காரணத்தால் கலந்தாய்வு நடத்தப்படுமா என்ற கேள்வி ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

No comments:

Post a Comment