Friday 26 April 2013

அரசு நலத்திட்டங்கள் பெறமாற்றுத்திறனாளிடமிருந்து விண்ணப்பம் வரவேற்பு



                             மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட இருக்கிறது. இது தொடர்பாக
விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினர் .பாண்டியராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: விருதுநகர் சட்டப்பேரவை மேம்பாட்டு நிதியிலிருந்து ஆண்டு தோறும் ரூ.5 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. அதனால், இந்த நிதியின் மூலம் உதவிகளான மூன்று சக்கர சைக்கிள், இணைப்பு சக்கரங்கள் பொறுத்தப்பட்ட மோட்டார் வாகனம், சக்கர நாற்காலி, காலிபர், கிரட்சஸ், நவீன செயற்கை அவயங்கள், கருப்புக் கண்ணாடி, மடக்குச் குச்சி, காதுக்கு பின்புறம் அணியும் காதொலிக் கருவி, சூரிய ஒளியினால் மின்சக்தி பெறும் பேட்டரி ஆகிய உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன. அதனால், விருதுநகர் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, குடும்ப அட்டை போன்றவைகளுடன் தனக்கு தேவைப்படும் உபகரணங்களை குறிப்பிட்டு விண்ணப்பங்களை அளிக்கலாம். இந்த விண்ணப்பங்களை சட்டப்பேரவை அலுவலகத்தில் நேரிலோ அல்லது குறிப்பிட்ட முகவரியான விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம், ஆட்சியர் அலுவலக வளாகம், குமாரசாமிராஜா நகர், மகளிர் காவல் நிலையம் அருகில், விருதுநகர்-2 என்ற முகவரிக்கு அஞ்சலிலோ விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment