Monday 29 April 2013

கட்டண கொள்ளையடிக்கும் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை வேண்டும்



              மாணவர்களிடம் சட்ட விரோதமாக கட்டண கொள்ளையடிக்கும் கல்லூரிகள் மீது கல்வித்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என "மூட்டா" பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மதுரை காமராஜர், நெல்லை சுந்தரனார், அன்னை தெரசா,
அழகப்பா பல்கலை., ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் (மூட்டா) பொதுக்குழு கூட்டம் நெல்லையில் நடந்தது. மூட்டா தலைவர் மனோகர ஜஸ்டஸ் தலைமை வகித்தார். துணைத்தலைவர்கள் நாகராஜன், மேரி ஜேசபின், ஜான்சன் முன்னிலை வகித்தனர். பொது செயாலளர் சுபாராஜூ இணை பொது செயலாளர்கள் உமாதேவி, கணேசன், பொருளாளர் பாண்டி பேசினர்.
                        
பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை எவ்வித தாமதமும் இல்லாமல் உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்கலைக்கழகம், பல்கலை., உறுப்பு கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் ஊதியம் மற்றும் பணிபாதுகாப்பு தொடர்பான மூட்டாவின் கோரிக்கைகளை அரசும் பல்கலைக்கழகமும் எடுக்காத நிலையில், வரும் மே 2ம் தேதி மதுரை மற்றும் நெல்லை பல்கலை., முன் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

                                மேலும் தேர்வுத்தாள் திருத்தும் பணியை புறக்கணிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. மாணவர்களையும், பெற்றோர்களையும் ஏமாற்றி கட்டண கொள்ளையடித்த கோவில்பட்டி கல்லூரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையை தடுக்கவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களிடம் சட்ட விரோதமாக கட்டண வசூல் செய்யும் கல்லூரிகள் மீது விதிமுறைப்படி கடும் நடவடிக்கை எடுக்க கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment