Sunday 28 April 2013

சுற்றுச்சூழல் பொறியியல்: எம்.இ., பட்டத்திற்கு இணையாக எம்.டெக்.,



            அரசு வேலைவாய்ப்புகளில், எம்.டெக்., - சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான பட்டம், எம்.., - சுற்றுச்சூழல் பொறியியல் பட்டத்திற்கு இணையாக கருதப்படும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது. உயர்கல்வி துறை வெளியிட்டுள்ள அரசாணை விவரம்:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய குழு கூட்டத்தில், எம்.டெக்., சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பட்டத்தை, எம்.., சுற்றுச்சூழல் பொறியியல் பட்டத்திற்கு இணையாக கருதலாம் என, அரசுக்கு பரிந்துரைத்தது. இதற்கு ஏற்றபடி உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment