Friday 10 May 2013

பிளஸ்–1 வகுப்பில் பிளஸ்–2 பாடத்தை நடத்தினால் பள்ளியின் அங்கீகாரம் ரத்து பள்ளிக்கல்வி அமைச்சர் எச்சரிக்கை:


பிளஸ்–1 வகுப்பில் பிளஸ்–2 பாடங்களை நடத்தினால் பள்ளியின் அங்கீகாரம்  ரத்துசெய்யப்படும் என்று சட்டசபையில் பள்ளிக்கல்விஅமைச்சர் வைகைச் செல்வன் எச்சரிக்கை விடுத்தார்.சட்டசபையில்பள்ளிக்கல்வித்துறை 
மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடந்தது.
பள்ளி அங்கீகாரம் ரத்து
விவாதத்தில் உறுப்பினர் பாலபாரதி பேசுகையில்பல தனியார்பள்ளிகளில் அதிக கல்விக்கட்டணம் வசூலிக்கப்படுகிறதுகட்டணத்தைபணமாக இல்லாமல் வங்கிக்கணக்கு மூலம் செலுத்தும் நிலைஇருந்தால் எவ்வளவு பணம் செலுத்தப்பட்டதுஎன்பதற்கு அதுஆதாரப்பூர்வமாக இருக்கும்பிளஸ்–2 தேர்வில்  தனியார்  பள்ளிகளைச் சேர்ந்த மாணவமாணவிகளே ரேங்க் எடுக்கிறார்கள்.  காரணம்  பலதனியார் பள்ளிகளில் பிளஸ்–1 வகுப்பில் பிளஸ்–2 பாடத்தை நடத்துகிறார்கள் என்று குறிப்பிட்டார்.அதற்கு பதில் அளித்த அமைச்சர்வைகைச் செல்வன், ‘‘ உறுப்பினர் கூறுவதைப் போல எந்த பள்ளியிலும்பிளஸ்–1 வகுப்பில் பிளஸ்–2 பாடம் நடத்தப்படவில்லைஅதுபோன்றுபிளஸ்–1 வகுப்பில் பிளஸ்–2 பாடங்களை நடத்தினால் அந்த பள்ளியின்அங்கீகாரம் ரத்துசெய்யப்படும்அதேபோல்மாணவர்களிடம் அதிககட்டணம் வசூலித்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுஇருக்கின்றனசென்னையில் ஒருசில பள்ளிகளின் அங்கீகாரம் கூடநிரந்தரமாக ரத்துசெய்யப்பட்டு உள்ளது’’ என்றார்.

No comments:

Post a Comment