Friday 3 May 2013

கலை, அறிவியல் கல்லூரிகள் ஜூன் 20ம் தேதி திறப்பு



             மாணவர்களின் கோடை விடுமுறை முடிந்து, ஜூன், 20ம் தேதி, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. தமிழகத்தில், 62 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 133 அரசு உதவி பெறும் கல்லூரிகள்,
438 சுயநிதி கல்லூரிகள் செயல்படுகின்றன. இதில், லட்சக்கணக்கான மாணவர்கள், கல்வி கற்கின்றனர். இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக, தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள், மார்ச், 9ம் தேதி போராட்டத்தில் குதித்தனர்இதனால், தமிழகத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளுக்கு, மார்ச், 15ம் தேதி முதல், காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டன. பின், ஏப்., 3ம் தேதி, அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்டன.ஏப்ரல் இரண்டாம் வாரம் தேர்வுகள் துவங்கி, மே இரண்டாம் வாரத்தோடு முடியவுள்ள நிலையில், மாணவர்களுக்கான கோடை கால விடுமுறை துவங்க உள்ளது.
                                இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குனர் செந்தமிழ் செல்வி கூறுகையில், "அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகள், கோடை விடுமுறை, மே, இரண்டாம் வாரத்தில் துவங்க உள்ளது. கோடை விடுமுறை முடிந்து, அனைத்து கல்லூரிகளும், ஜூன், 20ம் தேதி திறக்கப்பட உள்ளன" என்றார். பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே 9ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும், சுயநிதி கல்லூரிகள், இந்தாண்டு மாணவர் சேர்க்கையை துவங்கியுள்ளன. மே, 6ம் தேதியிலிருந்து அரசு கல்லூரிகள் விண்ணப்பங்கள் வழங்கவுள்ள நிலையில், மீதிமுள்ள கல்லூரிகள், தேர்வு முடிவுகள் வெளியான அன்றிலிருந்து, விண்ணப்பங்களை வழங்க உள்ளன.

No comments:

Post a Comment