Monday 13 May 2013

2003ல் தொகுப்பூதிய ஆசிரியர்களின் 2 ஆண்டு பணி முறிவு காலத்தை இரத்து செய்ய மார்க். கம்யூ னிஸ்ட் கோரிக்கை



         மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழு துணைத் தலைவர் கே.பாலபாரதி, வெள்ளியன்று (மே 10) பள்ளிக்கல்வித் துறை மானியக்கோரிக்கை மீது நடை பெற்ற விவாதத்தில் அவர் பேசியது வருமாறு: ஆசிரியர்
அமைப்புகளில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பள்ளிக் கல்வித்துறையில் அரசு எடுத்துள்ள நல்ல நடவடிக்கைகளை அனைத்து ஆசிரியர் சங்கங்களும் வரவேற்கிறார்கள். சமச்சீர் கல்வி மற்றும் மாணவர்களுக்கு வழங்கி யிருக்கக்கூடிய 14 வகையான விலை யில்லா பொருட்கள் கல்வி வளர்ச்சிக்கு பெரி தும் உதவிகரமாக இருக்கிறது. ஒரே நாளில் 21 ஆசிரியர்களுக்கு பணி உத்தரவை முதல்வர் வழங்கியிருப்பது பாராட்டுக்குரி யது என்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள். இந்த அடிப்படையில் ஆசிரியர்கள் பலர் தங்களது கோரிக்கைகளை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறும் நிச்சயம் அவர் அதை நிறைவேற்றித்தரு வார் என்றும் நம்பிக்கையுடன் தெரிவித் துள்ளனர்.
                               
தொடக்கப்பள்ளி ஆசி ரியர்கள் இலவச பொருட்களை பள்ளி களுக்கு கொண்டுவருவது உள்பட பல் வேறு வேலைகளை செய்கிறார்கள். அந்த பொருட்களை வாகனங்கள் மூலமாக பள்ளிகளுக்கு கொண்டு செல்வதற்கும் அந்த பொருட்களை இறக்கி வைப்பதற்கு பள்ளிகளில் உதவியாளர் ஒருவரை நிய மிக்கவேண்டும். மணியடிப்பதில் இருந்து குப்பைகளை கூட்டி பெருக்கும் பணிகள் வரை ஆசிரியர்கள் தான் செய்யவேண்டி யுள்ளது. தொடக்கப்பள்ளிகளில் உதவியா ளர் என்ற நியமனமே இது வரை இல்லை. எனவே அந்த ஆசிரியர்களுக்கு உதவி செய்ய உதவியாளர்களை நியமிக்கவேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் 6வது ஊதியக்குழு பரிந்துரைகளில் உள்ள முரண்பாட்டை நீக்கவேண்டும். 2003ல் தொகுப்பூதிய ஆசிரியர்களின் 2 ஆண்டு கால பணிமுறிவு என்று அறிவிக்கப்பட் டதை ரத்து செய்யவேண்டும். கடந்த கால அரசு செய்த தவறை களையவேண்டும்.
                                 
ஊர்புற நூலகர்களாக பலரை நியமித்து பெண்களுக்கு இளைஞர் களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவர் கள் சிறப்பு ஊதியம் பெற்று வருகிறார்கள். அவர்களது பணியை நிரந்திரப்படுத்தி னால் கிராமப்புற மக்களிடம் வாசிப்புத் திறனை அதிகரிக்கமுடியும். வேளாண் கல்வி ஆசிரியர்கள், தொழில்கல்வி ஆசிரி யர்கள், கணினி முடித்திருப்பவர்கள் ஆசி ரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்றும் பணி வழங்கப்படவில்லை. அவர் களுக்கு பணி வழங்கவேண்டும்
.

No comments:

Post a Comment