Sunday 12 May 2013

2004-ல் தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டஆசிரியர்கள் பணிக்காலமாக மாற்ற வேண்டும் -திண்டுக்கல் எம்.எல்.ஏ பாலபாரதி கோரிக்கை-, அரசின் பரிசீலனையில் இருக்கிறது, விரைவில், உரிய முடிவு எடுக்கப்படும்" என அமைச்சர் வைகைச்செல்வன் அறிவித்தார்.


"நாமக்கல் மாவட்ட தனியார் பள்ளிகளில்பல்வேறுவிதிமீறல்கள் நடக்கின்றனகணிதம்அறிவியல் பாடப்பிரிவுகள்மட்டுமேஅங்கு நடத்தப்படுகின்றனஒரு  பிரிவில், 80 மாணவர்களுக்குமேல் சேர்க்கக்கூடாது எனவிதி 
இருந்தும்அங்கு, 800மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்என மார்க்சிஸ்ட் எம்.எல்..,பாலபாரதிஅடுக்கடுக்காக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார்.சட்டசபையில்பள்ளிக்கல்வித்துறைதமிழ் வளர்ச்சித்துறை மற்றும்இளைஞர் நலன்விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஆகிய மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம்,நடந்ததுவிவாதம் வருமாறு:
மார்க்சிஸ்ட்பாலபாரதிதமிழகத்தில்சமச்சீர் கல்வி அமல்படுத்தியாகிவிட்டதுஅரசு மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில்ஒரே வகைபாடத்திட்டம் தான்அமலில் இருக்கிறதுஅப்படியிருக்கும் போது,மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு எனதனி இயக்குனரகம்தேவையில்லைஅனைத்து வகை பள்ளிகளையும்ஒரு  குடையின் கீழ்கொண்டு வர வேண்டும்.தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய குழு நிர்ணயித்தகட்டணத்தை விடதனியார் பள்ளிகள் அதிக கட்டணங்களைவசூலிப்பதாக புகார்கள் வருகின்றனஇதை எதிர்த்துகோர்ட்டில்வழக்குகளும்  தொடரப்பட்டுள்ளன.
வைகைச்செல்வன்பள்ளிக்கல்வி அமைச்சர்தனியார் பள்ளிகள்அதிககட்டணம் வசூல் செய்வதில்லைஒரு சில பள்ளிகளில்இதுபோன்றுநடந்திருக்கலாம்அப்படிப்பட்ட பள்ளிகள் மீதும்நடவடிக்கைஎடுத்துள்ளோம்.சென்னைவேப்பேரியில்செவன்த்டே அட்வெண்டிஸ்ட் பள்ளிசெயின்ட்ஜான்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளிமதுரையில்மரியான் மெட்ரிகுலேஷன்பள்ளி ஆகியவற்றின் நிரந்தர அங்கீகாரத்தை திரும்ப பெற்று,நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாலபாரதிதனியார் பள்ளிகள்பெற்றோர்களிடம்அதிக கட்டணம்வசூலிக்கும்  பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கவங்கிகள் மூலம்,நேரடியாககல்வி கட்டணம் செலுத்தும் திட்டத்தை செயல்படுத்தவேண்டும்.பிளஸ் 2 தேர்வில்நாமக்கல்  மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள்,மாநில அளவிலான இடங்களை பிடித்துள்ளனர்நாமக்கல்ஈரோடு,சேலம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தகுறிப்பிட்ட தனியார்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களேபொதுத்தேர்வுகளில்மாநிலஅளவிலான இடங்களை பிடிக்கின்றனர்ஆனால்அரசு பள்ளிகளால்,ஏன் இந்த சாதனையை செய்ய முடியவில்லை?
அமைச்சர்விருதுநகர் மாவட்டம்தொடர்ந்து, 28 ஆண்டுகளாக, முதலிடத்தில்  இருந்து வருகிறதுஅரசு பள்ளிகளின் தரம்குறைந்துவிடவில்லைமுந்தைய தி.மு.., அரசு தான்கல்வியை கடைசரக்காக மாற்றிவிட்டதுதற்போதுஅரசு பள்ளிகளில்மாணவர்சேர்க்கை அதிகரித்துள்ளதுதரமும் உயர்ந்துள்ளது.
பாலபாரதிநாமக்கல் உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ள தனியார்பள்ளிகளில்பல்வேறு விதிமீறல்கள் நடக்கின்றனஅந்த பள்ளிகளில், 10, 11, 12 ஆகிய  வகுப்புகள் மட்டுமே நடத்தப்படுகின்றனநாமக்கல்மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில்கணிதம்அறிவியல்பிரிவுகளில் மட்டும், 800 மாணவர்கள்  சேர்க்கப்படுகின்றனர்.வரலாறுபொருளியல்வணிகவியல்தமிழ் இலக்கியம்  உள்ளிட்ட எந்த, "குரூப்'களும்அங்கு கிடையாதுமருத்துவம்பொறியியல்  படிப்புகளைமட்டுமே நோக்கமாகக் கொண்டுஅந்த பள்ளிகள் இயங்கி வருவது, இதன்மூலம் வெட்ட வெளிச்சமாகிறதுஇந்த நோக்கம் மிகவும்தவறானதுகுறிப்பிட்டகுரூப்களில், 800 மாணவர்களை சேர்க்க, அதிகாரிகள்  எப்படி  அனுமதித்தனர்?
தங்கமணிதொழில்துறை அமைச்சர்எனது மகன்அங்குள்ள பள்ளியில், தொழிற்கல்வி பிரிவு படிக்கிறார்எனவேஇதர பாடப்பிரிவுகள் அங்கு இல்லை  எனகூற முடியாது.
பாலபாரதிஅரசு பள்ளிகளில்ஒரு பாடப்பிரிவில், 80 மாணவர்களுக்கு மேல் சேர்க்க  அனுமதி இல்லைஅப்படியிருக்கும்போது, 800மாணவர்களுக்கு  அனுமதி வழங்குவது எப்படிஇந்த பள்ளிகளில்,முன்கூட்டியே வகுப்புகள்  நடத்தப்படுகின்றனஇதுபோன்ற பள்ளிகளை,அரசே ஏற்று நடத்த வேண்டும்இவ்வாறு விவாதம் நடந்தது.
ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கை ஏற்பு ; கடந்த, 2004ல், அப்போதைய  .தி.மு.., ஆட்சியில், 40 ஆயிரத்திற்கும்  மேற்பட்டஆசிரியர்கள்தொகுப்பூதிய  அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டனர்.இவர்களை, 2006ல்தி.மு..,  அரசுபணி நிரந்தரம் செய்ததுவிடுபட்ட இருஆண்டுகளை, "ரெகுலர்பணிக்காலமாக மாற்ற வேண்டும் என,தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்புதமிழ்நாடு ஆசிரியர்முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள்பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றன.இந்த பிரச்னை குறித்துபாலபாரதிநேற்று கேள்வி எழுப்பியதற்கு, "ஆசிரியர்கள் கோரிக்கை அரசின் பரிசீலனையில்  இருக்கிறது.விரைவில்உரிய முடிவு எடுக்கப்படும்என அமைச்சர் வைகைச்செல்வன் அறிவித்தார்.

No comments:

Post a Comment