Wednesday 15 May 2013

சி.ஏ., தேர்வு 24ம் தேதிக்கு தள்ளிவைப்பு



              சி.., படிப்பிற்கான, குரூப் - 2, 7ம் தாள் தேர்வு, இம்மாதம், 24ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: சி.., படிப்பிற்கான, குரூப் - 2, 7ம்
தாளில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை படிப்பிற்கான தேர்வு, நேற்று(15ம் தேதி) நடப்பதாக இருந்தது. இத்தேர்வு, இம்மாதம், 24ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. ஏற்கனவே அளிக்கப்பட்ட நுழைவு சீட்டை கொண்டு, 24ம் தேதி தேர்வை எழுதலாம். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment