Friday 10 May 2013

இட ஒதுக்கீட்டை மறுக்கும் அரசாணை எண்.252ஐ திரும்பப் பெற வேண்டி தமிழ்நாடு அரசிடம் வழங்கப்பட்ட மனு


இட ஒதுக்கீட்டை மறுக்கும் அரசாணை எண்.252 திரும்பப் பெற வேண்டி தமிழ்நாடு அரசிடம் வழங்கப்பட்ட மனு;
(1) தமிழ்நாட்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நட்த்தும் ஆசிரியர் தகுதிதேர்வில் அனைத்து பிரிவினருக்கும் 
குறைந்தபட்சம் தேர்ச்சி மதிப்பெண்60% என நிர்ணயிக்கப்பட்டுள்ளதுமதிப்பெண் சலுகை SC/ST/OBC மற்றும்மாற்று திறனாளிகளுக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அரசுகள் வழங்கலாம்  என NCTE  கூறியிருந்தும் சமூகத்தில் ஒடுக்கப்பட்டபிரிவு மக்களுக்கு தமிழ்நாடு அரசு  மதிப்பெண் சலுகை வழங்காதது இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிரானதுஆசிரியர் தகுதிதேர்வு என்பது அரசுவேலைக்கான தேர்வு மட்டும் அல்லஇதில் தேர்ச்சி பெற்றால் தனியார்பள்ளிகளிலும் வேலை செய்யலாம்அப்படி இருக்க மதிப்பெண் சலுகைவழங்காதது ஒடுக்கப்பட்ட மக்களின் வேலைவாய்ப்பைதட்டிப் பறிப்பதோடு இப்பிரிவு மக்களுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம்வழங்கி உள்ள அடிப்படை உரிமையை மறுக்கும் செயலாகும்எனவேஇவர்களுக்கு ஆசிரியர்  தகுதி தேர்வில் மதிப்பெண் சலுகைவழங்கப்படவேண்டும்.

(2) தகுதி தேர்வின் அடிப்படையில்ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம்காலிப்  பணியிடங்களில் ஆசிரியர்களை நியமிக்க தகுதியை நிர்ணயித்து5.10.2012 அன்று  அரசாணை எண்.252 வெளியிடப்பட்ட்துஇந்தஅரசாணையில் இட ஒதுக்கீட்டின்  அடிப்படையில் தகுதியைநிர்ணயிக்காத்தால் இந்த அரசாணை இந்திய அரசியலமைப்புச் சட்டம்15(4),16(4) ஆகிய பிரிவுகளுக்கு எதிரானதுமேலும் மத்திய அரசு  தனதுஅலுவலக குறிப்புகளில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவழிகாட்டுதலைக் கொடுத்திருக்கிறதுஇவற்றின் சாராம்சம்என்னவென்றால் எந்த  காரணத்தை கொண்டும் SC/ST/OBC பிரிவுமக்களின் பணியிடங்கள் காலியாக  இருக்கக்கூடாது என்பதே ஆகும்.அவற்றில் இருந்து தான் மாநிலங்கள் இட  ஒதுக்கீடு கொள்கைகளைஉருவாக்கி கொள்ளலாம் அதாவதுஅவற்றை விட  அதிகமானசலுகைகளை வழங்கலாமே தவிர சலுகைகளை மறுப்பதற்கு மாநிலங்களுக்கு உரிமையில்லைஅரசாணை எண்.252 திட்டவட்டமாகஇட  ஒதுக்கீட்டை மறுத்துத் ‘தரத்தைப்’ பற்றி மட்டுமே பேசுகிறதுமேலும்,உயர்கல்வி பெற்றுவிட்ட ஒருவரை வேலைக்கு சேர்க்கும்போது அவரின்பள்ளிக்கல்வியை  கூட இதுவரை யாரும் தகுதியை நிர்ணயிக்ககணக்கில் எடுத்துக்கொண்ட்தில்லைஅதிலும் பள்ளிக்கல்வியில் +2வில்பெற்ற மதிப்பெண் தகுதியாக உயர்கல்வி படித்தவருக்கு எங்கும்நிர்ணயித்த்தில்லை.+2விற்குப் பிறகு பட்டயப்படிப்பு (D.T.Ed)முடித்தவருக்கும், +2 விற்கு பிறகு  இளங்கலை பட்டம்கல்வியில் இளங்கலை  முடித்தவருக்கும் +2வில் எடுத்த மதிப்பெண் தகுதியாகஎடுத்திருப்பதும்அதிலும்  +2வில் 50%த்திற்குக் குறைவான மதிப்பெண்எடுத்தவருக்கு ‘0’ (சுழியம்மதிப்பு  கொடுக்கப்பட்டுள்ளதுஇத்தகையதகுதி நிர்ர்ணயிப்பு தாழ்த்தப்பட்டமிகவும் பிற்படுத்தப்பட்ட,பிற்படுத்தப்பட்டபிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்கள் ஆகியோர்வேலையை பறிக்கும் சூழ்ச்சியே ஆகும்தகுதி தேர்வில் நல்லமதிப்பெண் பெற்றாலும் +2 வில் 50% இல்லை என்றால் 100ல் 10மதிப்பெண் இந்த தேர்வர் இழந்து விடுகிறார்அதேபோல் பட்டப்படிப்பில்50%த்திற்கும் கீழ் 10 மதிப்பெண் என்கிறபோது 5 மதிப்பெண் இழக்கிறார்.கல்வியியல் பட்டப்படிப்பில் 70%ற்கும் குறைவாக எடுத்தவர் 3 மதிப்பெண்இழக்கிறார்அரசாணை எண்.252ல் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில்தகுதி நிர்ணயிக்கப்படாததால்மொத்தத்தில் ஒரு பட்டதாரி ஆசிரியர் +2மற்றும் பட்டபடிப்புகளில் 18 மதிப்பெண் இழக்கிறார்.

(3) வாய்ப்பே அளிக்காமல் ‘தரம்’ எங்கிருந்து வரும்ஆதிதிராவிடநலத்துறைபிற்படுத்தப்பட்டோர் நலத்துறைசீர்மரபினர் பள்ளி,உள்ளாட்சி பள்ளி மற்றும் கிராமத்து பள்ளிகளில் படித்த மாணவர்கள்எந்த அடிப்படை வசதியும்இன்னும் சொல்லப்போனால் நூலகரும்நூலகமும் இல்லாத பள்ளிகளில் பயின்ற ஏழை எளிய குடும்பத்துமாணவர்களுக்கு ஆசிரியர் பணியிட்த்தை மறுக்கும் செயலாகும். . இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தகுதி தீர்மானிக்காத அரசாணை எண்.252இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் உச்சநீதிமன்றம் இந்திரா சகானிவழக்கு உட்பட பல வழக்குகளில் கொடுத்த தீர்ப்பக்கு எதிரானது எனவேஇவ்வரசாணை திரும்ப்ப்பெறப்ப்டவேண்டும்.
(4) அரசு அமைக்கும் குழு வழங்கும் பரிந்துரையின் அடிப்படையில்ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப சென்னை உயர்நீதிமன்றம் சொன்னதேதவிரஅரசு அமைத்தக் குழு இட ஒதுக்கீட்டை மறுக்கும் என நீதமன்றம்எதிர்பார்த்திருக்காதுஅரசு அமைத்த குழுவின் பரிந்துரையில் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தகுதி நிர்ணயிக்கப்பட்டவில்லை என அதைஅரசு நிராகரித்து இருக்கவேண்டும்மாறாக அதை ஏற்றுவெளியிடப்பட்ட அரசாணை எண்.252 அரசியலமைப்புச் சட்டம் வழங்கியஅடிப்படை உரிமையை நிர்மூலம் ஆக்கும் செயலாகும்மேலும் ஆசிரியர்பயிற்சியில் சேரும்போது பட்டியல் இனத்தவருக்கும்பிற்படுத்தப்பட்டோருக்கும் வழங்கப்பட்ட மதிப்பெண் சலுகைகள்இவ்வாணையால் பொருளற்றதாகிறது.
(5) அரசாணை எண்.252 தீர்மானித்த தகுதியின் அடிப்படையில் ஆசிரியர்தேர்வு வாரியம் பணியிடம் நிரப்புவதில் பின்பற்றிய இட ஒதுக்கீட்டுவழிமுறை தன்னிச்சையானது (Arbitrary) ஆகும்தமிழ்நாடு அரசுப் பணிதேர்வாணையம் (TNPSC) பின்பற்றுவது போல இட ஒதுக்கீட்டின்அடிப்படையில் ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாக குறைந்தபட்சதகுதி மதிப்பெண் தீர்மானிக்காமல்தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்அடிப்படையில் மேலிருந்து கீழாக வரிசைப்படுத்தி வழங்கப்பட்ட்தாககூறப்படும் இட ஒதுக்கீடு என்பதன் மூலம் முறையான இட ஒதுக்கீட்டின்அடிப்படையில் தகுதி பெறக்கூடிய உரிமையை ஒடுக்கப்பட்ட மக்களைஇழக்க செய்துள்ளதுஇதன் விளைவு தான் டிசம்பர் 2012 ஆசிரியர்பணியிட நியமனத்தில் உருவாகி உள்ள பட்டதாரி ஆசிரியர் பின்னடைவுகாலிப் பணியிடங்கள் BCM (முஸ்லீம்) MBC/DNC SC SCA ST மொத்தம் 153 151 659 131 90 1184 எனவே அரசாணை எண்.252ன்  அடிப்படையில்  வழங்கப்பட்ட பணியிடநியமன்ங்களை  மறு பரிசீலனை  செய்யவேண்டும்பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்ப உடனடியாக சிறப்பு நடவடிக்கைஎடுக்கவேண்டும்.
(6) வருங்காலங்களில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தகுதிதீர்மானிக்கப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரியம்தமிழ்நாடு அரசு பணியாளர்தேர்வாணையத்தின் நடைமுறையை பின்பற்றி பணியிட நியமனஅறிவிக்கையை (Notification) வெளியிடும்போதே பணியிடங்களின்எண்ணிக்கையையும்இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பல்வேறுபிரிவினருக்கான காலி பணியிடங்களின் எண்ணிக்கையும் அறிவிக்கவேண்டும்.  இத்தகைய நடைமுறையில் தான் இட ஒதுக்கீடுசரியான முறையில் பின்பற்றப்பட்ட்தை உறுதிப்படுத்திக்கொள்ளமுடியும்.
(பு.பாபிரின்ஸ் கஜேந்திர பாபு)
பொதுச்செயலாளர் ,
பொதுப்பள்ளிக்கானா மாநில மேடை

No comments:

Post a Comment