Monday 6 May 2013

25 சதவீத இலவசக் கல்வி முழுமையாக நிறைவேற்றம்: பொதுக்குழுவில் முடிவு


                      "தமிழக அரசின், 25 சதவீதம் இலவச கல்வியை, பள்ளிகளில் முழுமையாக நடைமுறைப்படுத்துவது" என, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட தனியார் பள்ளி கூட்டமைப்பின், பொதுக்குழுக் கூட்டம்,
நாமக்கல் அடுத்த ரெட்டிப்பட்டி பாரதி மேல்நிலைப்பள்ளியில் நடந்ததுமாவட்டத் தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். வக்கீல் பாலு, 25 சதவீதம் இலவச கல்வி வழங்குவதில் உள்ள நடைமுறைகள் பற்றி விளக்கினார். ஆடிட்டர் வெங்கடசுப்ரமணியம், தனியார் பள்ளிகளில் கட்டணம் நிர்ணயம் குறித்தும், அதில் உள்ள சாதக, பாதகங்கள் பற்றியும் விளக்கிப் பேசினார்.
                           
கூட்டத்தில், அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, பள்ளி மாணவ, மாணவியருக்கு தேவையான குடிநீர், சுகாதார வசதிகள் மேம்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது. தமிழக அரசின், 25 சதவீதம் இலவச கல்வியை, பள்ளிகளில் முழுமையாக நடைமுறைப்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும், கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்யும் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டிய கருத்துக்கள், உரிய காலத்துக்குள் சமர்ப்பிப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
                              
அதேபோல், இன்றைய சூழ்நிலையில், தனியார் பள்ளிகள் எதிர் கொள்ளும் சிரமங்கள் பற்றியும், ஆலோசனை செய்யப்பட்டது. ராசிபுரம் தாலுகா தலைவர் சிதம்பரம், பொறுப்பாளர்கள் பாலகிருஷ்ணன், வக்கீல் பாலசுப்ரமணியம், நிர்வாகிகள், உறுப்பினர்கள், பள்ளி தாளாளர்கள், முதல்வர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


No comments:

Post a Comment