Monday 6 May 2013

பணி நியமன உத்தரவு பெற்றும் பயனில்லை குரூப் 2ல் வெற்றி பெற்றோர் விரக்தி



               டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வில் தேர்ச்சியடைந்து, பணி நியமன உத்தரவு பெற்ற பின்னும், பல்வேறு துறைகளில் ஒதுக்கப்பட்ட பணிகளில் சேர முடியாமல் தேர்ச்சி பெற்றோர் விரக்தியடைந்துள்ளனர். சார்பதிவாளர் கிரேடு-2, நகராட்சி கமிஷனர் கிரேடு-2, உதவி
பிரிவு அலுவலர் (நிதி மற்றும் சட்டத்துறை), உதவி கமிஷனர் (உள்ளாட்சி), உதவி கமிஷனர் (நிதி தணிக்கை) உட்பட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக, டி.என்.பி.எஸ்.சி., (குரூப் 2) சார்பில் 13.6.2012ல் அறிவிப்பு வெளியானது. இதற்கான தேர்வு 12.8.2012ல் நடந்தது. வினாத்தாள் வெளியானதாக எழுந்த சர்ச்சையால், அத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, 4.11.2012ல் மறுதேர்வு நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு 22.2.2012 முதல் 30.2.2013 வரை சென்னையில் நேர்காணல் நடந்தது. அதன் மூலம் 1507 பேருக்கும், மார்ச் 8 மற்றும் 9ல் சென்னையில் "கவுன்சிலிங்" நடந்தது. அவர்களுக்கு பணி நியமன உத்தரவுகளும் வழங்கப்பட்டன.
                                    
நியமன உத்தரவுகளை பெற்றவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளில் பணியில் சேர சென்ற போது, அந்த துறைகளுக்கு, டி.என்.பி. எஸ்.சி., சார்பில் எவ்வித தகவலும் அனுப்பவில்லை என பதில் அளிக்கப்பட்டது. இதனால், வெற்றி பெற்றவர்கள் பணியில் சேரமுடியாமல் விரக்தியில் உள்ளனர். தேர்வு எழுதியவர்கள் கூறியதாவது: பல்வேறு கனவுகளுடன் தேர்வு எழுதினோம். வெற்றி பெற்றவுடன் பணியில் சேரலாம் என நினைத்து, நியமன உத்தரவை பெற்றோம். ஒதுக்கப்பட்ட துறைகளுக்கு சென்று கேட்டால், "எங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை," என்கின்றனர். டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் கேட்டால், எந்த பதிலும் சொல்வதில்லை, என்றனர்
.

No comments:

Post a Comment