Monday 6 May 2013

3 லட்சம் ஆசிரியர்கள் பற்றாக்குறை



             ஒன்றாம் வகுப்பில் இருந்து ஆங்கிலத்தை கட்டாய பாடமாக்க உத்திர பிரதேச அரச உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதற்கு தகுந்தாற் போல் போதிய அளவு ஆங்கில பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை. மத்திய
உயர்கல்வித்துறை முன்னாள் தலைவர் அசோக் கங்குலியின் அறிக்கையின்படி, உத்திர பிரதேசம் முழுவதும் 2 முதல் 2.5 சதவீதம் ஆங்கிலம் தெரிந்த துவக்க மற்றும் உயர்கல்வி ஆசிரியர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி உத்திர பிரதேச பள்ளிகளில் 3 லட்சம் ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். இதே போன்று பீகாரில் 2.60 லட்சமும், மேற்கு வங்கத்தில் ஒரு லட்சமும் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. உத்திர பிரதேசத்தில் 1.43 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக தேசிய ஆசிரியர் கல்வி கழகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment