Saturday 4 May 2013

பள்ளி சத்துணவு மையங்களுக்கு ரூ.3.10 கோடி ஒதுக்கீடு



             தமிழகத்தில் பள்ளி சத்துணவு மையங்களில் உணவூட்டும் செலவினத்தை உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகளுக்கு காய்கறிகளுக்கு பருப்பு
பயன்படுத்தும் நாட்களுக்கு 70 பைசா, பருப்பு பயன்படுத்தப்படாத நாட்களுக்கு 82 பைசா, தாளிதத்திற்கு முறையே 20 பைசா, 40 பைசா, எரிபொருளுக்கு முறையே 40 பைசா, 48 பைசா என உயர்த்தப்பட்டுள்ளது. 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை காய்கறிகளுக்கு பருப்பு பயன்படுத்தும் நாட்களுக்கு 80 பைசா பருப்பு பயன்படுத்தப்படாத நாட்களுக்கு 92 காசு, எரிபொருளுக்கு 40 பைசா, 48 பைசா என உயர்த்தப்பட்டுள்ளது.
                           
அங்கன்வாடி மையங்களில் பயன் பெறும் 2 வயது முதல் 5 வயது வரை குழந்தைகளுக்கு காய்கறிகளுக்கு பருப்பு பயன்படுத்தும் நாட்களுக்கு 70 பைசா, பருப்பு பயன்படுத்தப்படாத நாட்களுக்கு 80 பைசா, தாளிதத்திற்கு முறையே 24 பைசா, 36 பைசா, எரிபொருளுக்கு முறையே 19 பைசா, 19 பைசா என உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு உணவூட்டு செலவினத்தை உயர்த்தி வழங்குவதால் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்திற்கு 2.06 கோடி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்திற்கு 1.04 கோடி உட்பட 3.10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது
.

No comments:

Post a Comment