Sunday 5 May 2013

9ம் தேதி முதல் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புக்கு விண்ணப்பம் வினியோகம்


தமிழகத்தில் இன்ஜினியரிங் கல்விக்கான விண்ணப்பவிநியோகம் நேற்று முதல் நடைபெற்று வருகிறதுஇதைத்தொடர்ந்து மருத்துவம் மற்றும் பல் மருத்துவ  படிப்புகளுக்கான விண்ணப்பங்கள்  மற்றும் தகவல் தொகுப்பேடுகள்  வினியோகம் வரும் 9ம் தேதி 
(வியாழக்கிழமைதொடங்குகிறது என மருத்துவக்  கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார். நெல்லைமதுரைதூத்துக்குடி, கன்னியாகுமரி,  சிவகங்கைகோவைதேனிசென்னை மருத்துவக்கல்லூரிசென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரிதஞ்சாவூர்வேலூர்,தர்மபுரிதிருவாரூர்விழுப்புரம்சென்னை தமிழ்நாடு பல் மருத்துவக்கல்லூரிதிருச்சிசேலம்கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரிதேனிமருத்துவக் கல்லூரி ஆகிய 19  மருத்துவக் கல்லூரிகளிலும் 9ம் தேதிகாலை 10 மணி முதல் விண்ணப்பங்கள்  வழங்கப்படும்விடுமுறைதினங்கள் உள்பட தினமும் மாலை 5 மணி வரை  விண்ணப்பங்கள்பெறலாம்.
விண்ணப்ப படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டிற்கான பொதுவிண்ணப்ப  கட்டணம் ரூ.500 ஆகும்சிறப்பு ஒதுக்கீட்டுக்கு (எஸ்சி,எஸ்டிஎஸ்சிஏ ) ரூ.100 வீதம் வரைவு காசோலையை இணைத்துவழங்க வேண்டும்மேலும்  இப்பிரிவினர் சான்றொப்பம்செய்யப்பட்ட சாதிச் சான்றிதழ் 2 நகல்களை  இணைக்க வேண்டும். வரைவோலையைசெயலாளர் தேர்வுக்குழு,  கீழ்ப்பாக்கம்,சென்னை என்ற பெயரில் சென்னையில் மாற்றத் தக்கதாக எடுக்கவேண்டும், விண்ணப்பிப்பவர் குடும்பத்தில் முதல்  பட்டதாரியாக  இருந்தால் அவர்கள் தகவல் தொகுப்பேட்டில் நிர்ணயிக்கப்பட்டுள்ள அதற்குரிய  சான்றிதழ்களை  பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்த  விண்ணப்பங்கள்  செயலாளர்தேர்வுக்குழு, 162,பெரியார் ஈவெரா சாலைகீழ்ப்பாக்கம் சென்னை என்ற முகவரிக்குவரும் 20ம் தேதி மாலை 5 மணிக்கு முன்னதாக அனுப்பி வைக்க«வண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை  மருத்துவக்கல்லூரி  மருத்துவமனையில் முதற்கட்டமாக 2 ஆயிரம் விண்ணப்பங்களை வரவழைத்து வழங்குவதற்கான ஏற்பாடுகளைசெய்து  வருகின்றனர்நெல்லை மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் எம்பிபிஎஸ்  கல்விக்கு 150 இடங்கள் உள்ளனஎன்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment