Tuesday 28 May 2013

தொழில்நுட்பம் அல்லது தொழில் கல்வி பட்டம் வழங்கும் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் இணைப்பதை நிறுத்தி வைக்குமாறு பல்கலைக்கழக மானிய குழு உத்தரவு:



             பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்ட, தொழில்நுட்ப கல்லூரிகள் என்ற வரையறையின் கீழ் வராத கல்லூரிகள் எம்.பி.. மற்றும் எம்.சி.. வகுப்புகளை நடத்த அகில இந்திய  தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் ஒப்புதலை
பெற வேண்டிய தேவை இல்லை என்று சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு கூறி இருந்தது. இந்த நிலையில் பல்கலைக்கழக மானிய குழு, பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது. அதில், தொழில்நுட்பம் அல்லது தொழில் கல்வி பட்டம் வழங்கும் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் இணைப்பதை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக்கொண்டு உள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து சரியான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையை எடுக்கும் முயற்சியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

No comments:

Post a Comment