Tuesday 21 May 2013

இடைக்கால ஆசிரியர் நியமன முறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் - நாளிதழ் செய்தி



              தொடக்கப் பள்ளிகளில் இடைக்கால ஆசிரியர்களை நியமிப்பதில் கல்வித் தகுதி உள்ளிட்ட வரைமுறைகளை மாநில அரசுகள் பின்பற்றாதது குறித்து உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. கல்வி
உதவியாளர் நியமனம் குறித்து குஜராத் அரசு தாக்கல் செய்த முறையீட்டை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.செüஹான், தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு திங்கள்கிழமை விசாரித்தது. அப்போது நீதிபதிகள் குறிப்பிட்டது: கல்வி உரிமை சட்டம் நடைமுறைக்கு வந்தபின்பும் இடைக்கால ஆசிரியர் நியமன முறை தொடர்வது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற ஜனரஞ்சகமான திட்டங்கள் நாட்டின் வருங்காலத்தையே பாழாக்குவதை அனுமதிக்க முடியாது. இந்திய அரசியல் சட்டத்தில் கல்வி உரிமையை அளிக்கும் 21- பிரிவு இருக்கும்போது இதுபோன்ற நடைமுறைகள் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதை எப்படி அனுமதிக்க முடியும்? முறையான கல்வித் தகுதி இல்லாதவர்களை இடைக்கால ஆசிரியர்களாக நியமிப்பதால் கல்விகற்பிக்கும் முறையையே பாழடித்துவிடுகிறோம் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இடைக்கால முறையில் நியமிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment