Wednesday 22 May 2013

கலை, அறிவியல் கல்லூரிகளில் அலைமோதும் மாணவர் கூட்டம்



        கலை, அறிவியல் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கை ஓரிரு வாரங்களில் துவங்க உள்ளதால், விண்ணப்ப விற்பனை சூடு பிடித்துள்ளது. கலை, அறிவியல் கல்லூரிகளில், பி.காம்., படிப்பையடுத்து, பி.எஸ்சி., கணினி
பொறியியல், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட படிப்புகளிலும், பி.., தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம் உள்ளிட்ட படிப்புகளிலும் சேர, மாணவர்கள் அதிகளவில் விண்ணப்பிப்பர். பி.காம்., படிப்பில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதால், அரசு உதவி பெறும் கல்லூரி, தனியார் கல்லூரிகள், பி.காம்., படிப்பை, பல புதிய பெயர்களில் உருவாக்கி, சுயநிதி பாடப்பிரிவுகளாக வழங்குகின்றன.
                        
உதாரணமாக, முன்பு, பி.காம்., (ஜெனரல்) படிப்பு இருந்து வந்த நிலையில், தற்போது, பி.காம்., கம்ப்யூட்டர் அப்ளிக்கேஷன், ஹானர்ஸ் என, பல பெயரில் சுயநிதி பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றன. இதனால், பி.காம்., படிப்பிற்கு சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாரதியார் பல்கலையில் மட்டும், 13 வகையான பி.காம்., படிப்புகள் வழங்கப்படுகின்றன. இளங்கலை அறிவியல் பாடப்பிரிவிலும், உயர் இயற்பியல், உயிர் வேதியியல், பகுப்பாய்வு வேதியியல், மருத்துவ உயிர் வேதியியல், கரிம வேதியியல், கொள்கை இயற்பியல் துறை என, அடிப்படை அறிவியல் படிப்புகளும் புதிதாக அறிமுகப்படுத்தப்படுகின்றன.
                             
வேலைவாய்ப்பை வழங்கும் படிப்புகள் எனக்கூறி, பல சுயநிதி பாடப்பிரிவுகளையும், புதிதாக பல கல்லூரிகள் துவங்குகின்றன. இதனால், கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்கு, மாநில கல்லூரியில், 7,000 விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்ட நிலையில், அனைத்து விண்ணப்பங்களும் விற்பனையாகி உள்ளன. புது கல்லூரியில், 3,000 விண்ணப்பங்களில், 2,000 விண்ணப்பங்களும், வியாசர்பாடி அம்பேத்கர் அரசு கல்லூரியில், 5,000 விண்ணப்பங்களில், 1,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களும் விற்பனையாகி உள்ளன.
                      
இதுகுறித்து மாநில கல்லூரி முதல்வர் சபாநாயகம் கூறுகையில், "மொத்தம், 7,000 விண்ணப்பங்கள் விற்பனையான நிலையில், 1,500 விண்ணப்பங்களை மாணவர்கள் பூர்த்தி செய்து சமர்ப்பித்துள்ளனர். ஒற்றை சாரள முறையிலான மாணவர் சேர்க்கை அனைத்து கல்லூரிகளிலும் நடந்து வருகிறது. இதனால், மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசை பட்டியல் வெளியிடும் போது, எந்த துறைக்கு, மாணவர்கள் எவ்வளவு பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பது தெரிய வரும்" என்றார்
.

No comments:

Post a Comment