Tuesday 28 May 2013

விண்ணப்பித்த அனைவருக்கும் பொறியியல் இடம் கிடைக்கும்



                          "இன்ஜினியரிங் படிப்புக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் இடம் கிடைக்கும்" என அண்ணா பல்கலையின் புதிய துணைவேந்தர் ராஜாராம் கூறினார். அண்ணா பல்கலையின் புதிய துணைவேந்தராக, கோவை
அரசு இன்ஜி., கல்லூரி பேராசிரியர் ராஜாராம், நேற்று பதவியேற்றார். அவர் கூறியதாவது: அண்ணா பல்கலையால், அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகளில் உள்ள ஆசிரியர்களின் தரத்தை மேம்படுத்த, பல்கலையில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். அதுபோல, பொறியியல் படிப்பை முடித்து செல்லும் மாணவர்கள் வேலை வாய்ப்புகள் உறுதி செய்யும் வகையில், தொழில் நிறுவனங்களுடன் இணைந்து பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். பொறியியல் படிப்பிற்கு, இதுவரை, இரண்டு லட்சத்து, 34 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாகி உள்ளன. அதில், ஒரு லட்சத்து, 89 ஆயிரம் விண்ணப்பங்களை மாணவர்கள் சமர்ப்பித்துள்ளனர்.
                                
மாநிலம் முழுவதும், அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு நிதியுதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட கல்லூரிகளில், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. எனவே, பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்துள்ள அனைத்து மாணவர்களுக்கும் இடம் கிடைக்கும், என்றார்
.

No comments:

Post a Comment