Friday 10 May 2013

பி.இ. கட் ஆப் மதிப்பெண் குறையும், எம்.பி.பி.எஸ். கட் ஆப் உயரும் வாய்ப்பு



             பொறியில் படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் குறையவிருக்கிறது. அதே சமயம் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் உயர வாய்ப்பு உள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளது. இதையடுத்து
பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர். பொறியியல் படிப்புக்கு கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் மாணவர்கள் எடுத்துள்ள மதிப்பெண்களை கணக்கிட்டு கட் ஆப் மதிப்பெண் கணக்கிடப்படுகிறது. இந்த ஆண்டு கணிதப் பாடத்தில் 2,352 பேர் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 2,656 பேர் கணிதத்தில் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு கணித தேர்வு கடினமாக இருந்தது. இதனால் கணிதத்தில் 200க்கு 195 மதிபெண்களுக்கு மேல் எடுத்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் பொறியியல் படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண்ணில் சரிவு ஏற்பட்டுள்ளது. பொறியியல் கல்லூரிகளில் உள்ள காலி இடங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு 55,000 இடங்கள் காலியாக இருந்தன. இந்த ஆண்டு கணிதத்தில் மதிப்பெண் குறைவு, கட் ஆப் மதிப்பெண் சரிவு ஆகிய காரணங்களால் 70,000க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருக்கக்கூடும். பொறியியல் படிப்பில் சேர்வதற்கான கட் ஆப் மதிப்பெண் 0.25 முதல் 0.5 மதிப்பெண் வரை குறையும் என்று தெரிகிறது. எம்.பி.பி.எஸ். படிப்புக்கு உயிரியல், வேதியியல், இயற்பில் ஆகிய பாடங்களில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்களை கணக்கிட்டு கட் ஆப் மதிப்பெண் கணக்கிடப்படுகிறது. இந்த ஆண்டு உயிரியல் பாடத்தில் 682 மாணவர்களும், வேதியியலில் 1,499 பேரும் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இயற்பியல் பாடத்தில் வெறும் 36 பேர் மட்டுமே 200க்கும் 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதுவே கடந்த ஆண்டு 142 பேர் இயற்பியலில் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றனர். இருப்பினும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமான மாணவர்கள் இயற்பியலில் 200க்கு 195 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். இதனால் எம்.பி.பி.எஸ். கட் ஆப் மதிப்பெண் 0.25 முதல் 0.5 வரை அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. எனவே இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். கட் ஆப் மதிப்பெண் 200க்கு 199 ஆக இருக்கும். கடந்த ஆண்டு முதல் கட்ட கலந்தாய்வு முடிந்த பின்னர் அனைத்து பிரிவினருக்கான கட் ஆப் மதிப்பெண் 198.50 ஆக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு கட் ஆப் மதிப்பெண் 0.50 உயரும் என்பதால் அனைத்து பிரிவினருக்குமான கட் ஆப் மதிப்பெண் 199 ஆக இருக்கும்

No comments:

Post a Comment