Monday 6 May 2013

கணினியில் தமிழ் மொழியின் பங்கு அதிகரிப்பு: துணைவேந்தர்



                  "கம்ப்யூட்டரில் தமிழ் மொழியின் பங்கு அதிகரித்து வருகிறது," என்று திருச்சி பாரதிதாசன் பல்கலை துணைவேந்தர் மீனா பேசினார். தஞ்சாவூர் மருது பாண்டியர் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் துணைவேந்தர்
மீனா பேசியதாவது: வாழ்க்கையில் ஏராளமான பாதைகள் உள்ளன. ஒவ்வொருவருடைய குழந்தை பருவத்திலும் எதிர்காலத்தில் என்னவாக வேண்டும்? என்ற கனவு இருக்கும். அதை அடைவதற்கு முயற்சியும், விவேகமும் இருக்க வேண்டும். எல்லாத்துறைகளின் வளர்ச்சியிலும் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது.
                           
இந்நிலையில் கம்ப்யூட்டர் துறையில் தமிழ்மொழியின் பங்கும் அதிகரித்து வருகிறது. எதிர்காலத்தில் தமிழ் கம்ப்யூட்டிங்கின் பங்கு நிச்சயமாக இருக்கும். பி.எஸ்.ஸி., கம்ப்யூட்டர் அறிவியல் படிப்பை முதல் முதலாக அறிமுகப்படுத்தியதே பாரதிதாசன் பல்கலை தான். அதைத்தொடர்ந்து கம்ப்யூட்டர் துறையில் ஏராளமான படிப்புகள் வந்துவிட்டன. படித்து முடித்து வேலைக்குச் சென்ற பிறகும் படிக்கும் பணியை கைவிடக்கூடாது. தொடர்ந்து படித்தால் தான் அறிவுத்திறன் விரிவடைவதுடன் ஆய்வுத்திறனும் அதிகரிக்கும். இணையதளம், முகநூல் உள்ளிட்டவை வந்து விட்டதால் நுல்களை எடுத்து படிக்கும் பழக்கம் குறைந்து விட்டது. ஆனால், நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது? என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமானால் பத்திரிக்கைகள், புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் வர வேண்டும். இதற்கு வயது நேரம் போன்றவை தடையல்ல. இவ்வாறு திருச்சி பாரதிதாசன் பல்கலை துணைவேந்தர் மீனா பேசினார்
.

No comments:

Post a Comment