Wednesday 8 May 2013

"கல்வியின் தலைநகரம் தமிழகம்" -அமைச்சர் வைகை செல்வன்



              சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது புதிய தமிழகம் கிருஷ்ணசாமி(ஓட்டப்பிடாரம்) கேட்ட கேள்விகளுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் வைகைசெல்வன் அளித்த பதில்: மேலை நாடுகளுக்கு
இணையாக இந்தியாவில் தமிழகத்தில் தான் மிக தரமான கல்வி வழங்கப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மொத்த நிதி ஒதுக்கீட்டில் 25 சதவீதம் கல்விக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் தரத்தை ஆய்வு செய்யவும், அவர்களின் வருகை பதிவை கண்காணிக்கவும் ஸ்மார்ட் கார்டு திட்டம் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளிகளுக்கு உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. நாட்டின் தலைநகர் டெல்லி என்றாலும் கல்விக்கு தலைநகர் தமிழகம் தான். உறுப்பினர் கிருஷ்ணசாமி அவர் சார்ந்த இயக்கத்தின் பெயரில் புதிய என வைத்துள்ளார். ஆனால் அவரது சிந்தனையும் எண்ணமும் புதியதாக இல்லை. இவ்வாறு அமைச்சர் வைகை செல்வன் கூறினார்.

No comments:

Post a Comment