Friday 10 May 2013

அனைத்துப் பள்ளிகளிலும் ஆங்கில வழிப் பிரிவுகள்!


வரும் கல்வியாண்டு (2013-14)  முதல் தேவைப்படும் அனைத்துப்பள்ளிகளிலும்  ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை  அமைச்சர்  வைகைச்செல்வன் அறிவித்தார்.பள்ளிக் கல்வித் துறை 
மானியக் கோரிக்கை  மீதான விவாதம்பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றதுஇந்த  விவாதத்துக்குப்பதிலளிக்கும் போது அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:தனியார்  பள்ளி மாணவர்களைப் போன்று அரசுப் பள்ளி மாணவர்களும்ஆங்கிலத்தில்  பயிலும் வகையில் ஊராட்சி ஒன்றிய தொடக்க,நடுநிலைப் பள்ளிகள்அரசு உயர் நிலைப் பள்ளிகள்மேல்நிலைப்பள்ளிகளில் 1,6-ஆம் வகுப்புகளில்  இரண்டு  ஆங்கில வழிப் பிரிவுகள்வீதம் மொத்தம் 640 பிரிவுகள் தொடங்க அரசு  அனுமதியளித்தது.மொத்தம் 320 பள்ளிகளில் இந்தப் பிரிவுகள் தொடங்கப்பட்டு 22ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.வரும் கல்வியாண்டு முதல் தேவைப்படும் அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகள்நடுநிலைப் பள்ளிகள்உயர் நிலைப் பள்ளிகள்மேல்நிலைப்பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்கப்படும்இதனால்ஆண்டுக்கு 1.5 லட்சம் மாணவர்கள் பயனடைவர். பார்வைக் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு இலவசப் பொருள்கள்: 2013-14-ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் பார்வையற்றகுழந்தைகளுக்கு கற்பித்தல் முறையை எளிதாக்க கீழ்க்கண்டஉபகரணங்கள் அடங்கிய பை வழங்கப்படும். "ஸ்டைலஸ்', "ஸ்மால்லர்டெய்லர் ஃப்ரேம்', "அபாகஸ்', "ஃபோல்டிங் ஸ்டிக்', "டிராஃப்ட் ஃபோர்டு வித்காயின்ஸ்', "அரித்மெடிக் டைப்ஸ்', "அல்ஜீப்ரா டைப்ஸ்ஆகியஉபகரணங்கள் அடங்கிய பை வழங்கப்படும்இதனால் 2,221 மாணவர்கள்பயனடைவர்இதற்கான திட்டச் செலவு ரூ.18 லட்சம் ஆகும்.
சதுரங்கப் போட்டிமாணவர்களின் சதுரங்க விளையாட்டுத் திறனைவெளிக்கொண்டு வரும் வகையில் வரும் கல்வியாண்டில் இருந்து 269வட்டாரங்களில் உள்ள பள்ளிகளிடையேயும்பின்னர் கல்வி மாவட்டஅளவிலும்அதன்பிறகு மண்டல அளவிலும் சதுரங்க விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டுஇறுதியாக மாநில அளவில் விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்படும்.
நூலகங்கள் தரம் உயர்வுவரும் கல்வியாண்டில் மாவட்டத்துக்கு 3பகுதிநேர நூலகங்கள் வீதம் 96 பகுதிநேர நூலகங்கள் ஊர்ப்புறநூலகங்களாகத் தரம் உயர்த்தப்படும்மாவட்டத்துக்கு 5 ஊர்ப்புறநூலகங்கள் என 160 ஊர்ப்புற நூலகங்கள் கிளை நூலகங்களாகத் தரம்உயர்த்தப்படும்காஞ்சிபுரம்கோவைதிருச்சி மாவட்ட மையநூலகங்கள் ஒவ்வொன்றும் ரூ.50 லட்சம் செலவில் மாதிரிநூலகங்களாக தரம் உயர்த்தப்படும்.மதுரைதிருச்சிவிருதுநகர்ஈரோடு ஆகிய 4 மாவட்ட மையநூலகங்களில் உள்ள குழந்தைகள் பகுதி ரூ.20 லட்சம் செலவில்கம்ப்யூட்டர்கல்வி குறுந்தகடுகள் போன்ற நவீன சாதனங்களுடன் தரம்உயர்த்தப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

No comments:

Post a Comment