Tuesday 21 May 2013

பாடநூல் கழக அலுவலகத்தில் புத்தக விற்பனை விறுவிறுப்பு



            சென்னையில் உள்ள பாடநூல் கழக அலுவலகத்தில், அனைத்து வகுப்புகளுக்குமான பாடப் புத்தகங்கள், விறுவிறுப்பாக விற்பனை ஆகி வருகிறது. ஜூன், 2வது வாரத்தில் கோடை விடுமுறை முடிந்து, ஜூன், 3ம் தேதி,
அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. சென்னை, டி.பி.., வளாகத்தில் உள்ள பாடநூல் கழக அலுவலகத்தில், அனைத்து வகுப்புகளுக்கும், தற்பாது பாடப் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பத்தாம் வகுப்பு மற்றும், பிளஸ் 2 பாடப் புத்தகங்கள் கிடைக்காமல், மாணவர்களும், பெற்றோரும், ஒரு மாதமாக அவதிப்பட்டு வந்தனர். போட்டித் தேர்வுக்கு தயாராகி வருபவர்களும், பாடப் புத்தகங்கள் கிடைக்காமல், அல்லல்பட்டு வந்தனர். இந்நிலையில், அனைத்து வகுப்புகளுக்கும், பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு, பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு விட்டன.
                     
இதைத் தொடர்ந்து, பாடநூல் கழக அலுவலகத்தில், புத்தகங்கள், விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஒன்று முதல், பிளஸ் 2 வரை, அனைத்து வகுப்புகளுக்கும், புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பெற்றோர், நீண்ட வரிசையில் நின்று, புத்தகங்களை, வாங்கிச் செல்கின்றனர். எனினும், கடைகளில், இன்னும் புத்தகங்கள், விற்பனைக்கு வரவில்லை. இதுகுறித்து, பாடநூல்கழக நிர்வாக இயக்குனர் சரவணவேல் கூறியதாவது:ஒன்று முதல், 8ம் வகுப்பு வரை, ஏற்கனவே, முப்பருவ கல்வி முறை திட்டம் அமலில் உள்ளது. வரும் கல்வி ஆண்டில், 9ம் வகுப்பிற்கும், முப்பருவ கல்வி முறை, அமலுக்கு வருகிறது. எனவே, 9ம் வகுப்பிற்கும், மூன்று பருவங்களாக பிரித்து, பாடப்புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன.அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு, முதல் பருவத்திற்காக, 5.25 கோடி பாடப் புத்தகங்கள், பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
              
இன்னும், 10 சதவீத புத்தகங்கள் அனுப்ப வேண்டி உள்ளது. இந்த ஒரு வாரத்தில், அந்த புத்தகங்களும், சென்று சேர்ந்து விடும். ஒரு ஆண்டு முழுவதற்கும் சேர்த்து, அனைத்து வகுப்புகளுக்கும், 8.5 கோடி புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. மாநிலம் முழுவதும் உள்ள, 23 பாடநூல் கழக குடோன்கள் மூலம், தனியார் பள்ளிகள், தேவையான புத்தகங்களை பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சில்லரை புத்தக கடைகளில், ஜூன் 2வது வாரம் முதல், புத்தகங்கள் விற்பனைக்கு கிடைக்கும். 1,090 சில்லறை கடைகளில், பாடப் புத்தகங்கள், விற்பனைக்கு கிடைக்கும். இவ்வாறு சரவணவேல் தெரிவித்தார்
.

No comments:

Post a Comment