Saturday 25 May 2013

ஆன்லைன் கலந்தாய்வில் தகுதி இருந்தும் இடமாறுதல் வாய்ப்பை இழந்த ஆசிரியர்கள் சட்ட ரீதியாக பெற முடிவு



           ஆன்லைன் மூலம் நடந்த கலந்தாய் வில் தகுதி இருந்தும் பட்டியலில் பெயர் இடம் பெறாததால் பல ஆசிரியர்கள் இட மாறுதல் பெறும் வாய்ப்பை இழந்தனர். இதனால் சட்டப்படி உரிமையை பெற ஆசிரியர்கள் முடிவு
செய்துள்ளனர். முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 4வது நாளாக நேற்று நெல்லையில் ஆன் லைன் மூலம் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டது. உடற்கல்வி ஆசிரியர் உள்ளிட்ட 10 பாடப்பிரிவு ஆசிரியர் களின் பணி இடங்களுக்கு கலந்தாய்வு நடந்ததால் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏராளமான ஆசிரிய ஆசிரியைகள் எதிர்பார்ப் புடன் குவிந்திருந்தனர். இவர்கள் அனைவரும் முறைப்படி முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை வழங்கி அதற்கான ஒப்புதல் நகலும் பெற்றிருந்தனர். சீனியாரிட்டியை நம்பி பலர் உள் மாவட்டத்திலேயே தங்களுக்கு இடமாறுதல் நிச்சயம் கிடைக்கும் என எதிர்பார்ப்புடன் வந்திருந்தனர்.
                          ஆனால் அறிவிப்பு பட்டியல் வெளியிட்ட போதே பலருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் அவர்களது பெயர் பட்டியலில் இடம்பெறாதது தான். இது குறித்து அவர் கள் புகார் செய்தபோது சரியான பதில் கிடைக்காத தால் மேலும் அதிருப்தி அடைந்தனர். இது குறித்து பாதிக்கப் பட்ட ஆசிரிய ஆசிரியை களில் ஒருவரான கண்ணன் என்பவர் கூறியதாவது: நாள் நெற்கட்டும்செவல் பள்ளியில் கணித ஆசிரியராக உள்ளேன். எனது சீனியாரிட்டி பட்டி யலின் படி அறிவிக்கப்பட்ட கடையநல்லூரில் காலி இடம் சுலபமாக கிடைக்க வேண்டும். அதை நம்பி நான் கலந்தாய்வுக்கு வந்திருந்தேன். ஆனால் எனது பெயர் உள்மாவட்ட கலந்தாய்வில் பங்கேற்கும் தகுதி பட்டியலிலேயே இல்லை. இது எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. சங்கத்தினர் மூலம் கல்வித்துறையினரிடம் புகார் செய்துள்ளேன். எனது பெயர் மறைக்கப் பட்டதற்கான காரணம் என்னவென்று தெரிய வில்லை. சட்டப்படி எனக்கு உரிய மாறுதல் கிடைக்க முயற்சி செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.
                             இது போல் இன்னொரு ஆசிரியை உள்மாவட்டம் மற்றும் வெளிமாவட்டம் என இரு கலந்தாய்விலும் பங்கேற்க வாய்ப்பு கேட்டிருந்த நிலையில் தனது பெயர் உள்மாவட்ட பட்டியலில் இடம்பெறாத தால் ஏமாற்றத்தை அளித் தது என்று ஆதங்கத்துடன் கூறினார். இது குறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறுகை யில், ‘குழப்பங்கள் குறித்து கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு பேக்ஸ் அனுப்பி உள்ளோம். அவர்கள் நியாயமான நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம்என்று தெரிவித்தனர்.

No comments:

Post a Comment