Tuesday 7 May 2013

உலக தரத்துக்கு இணையாக பள்ளிகளில் உள்கட்டமைப்பு


பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது புதிய தமிழகம்கிருஷ்ணசாமி  (ஒட்டபிடாரம்கேட்ட கேள்விகளுக்குபள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வைகைச் செல்வன் அளித்த பதில்:தமிழகத்தில் குழந்தைகளின் புத்தகச் 
சுமையை குறைப்பதற்காகவேமுதல்வர் முப்பருவ முறை பாடத்திட்டத்தை கொண்டு வந்துள்ளார். பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள்பழைய கட்டிடங்களை புதுப்பித்தல்,கூடுதல்  வகுப்பறைகள், 75 ஆயிரம் மாணவிகளுக்கு கழிப்பறைகள், 2161பள்ளிகளுக்கு  அனைத்து அடிப்படை வசதிகள் ஆகியவைசெய்யப்பட்டுள்ளனமேலை நாடுகளுக்கு இணையாக இந்தியாவில் தமிழகத்தில் தான்மிகத்தரமான கல்வி வழங்கப்படுகிறதுஇந்த பட்ஜெட் டில்அறிவிக்கப்பட்ட மொத்த நிதி ஒதுக்கீட்டில் 25 சதவீதம்  கல்விக்காகஅறிவிக்கப்பட்டுள்ளதுமாணவர்களின் தரத்தை ஆய்வு செய்யவும், அவர்களின் வருகை பதிவை கண்காணிக்கவும் ஸ்மார்ட் கார்டு திட்டம் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளிகளுக்கு உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளனநாட்டின்தலைநகர் டெல்லி என்றாலும் கல்விக்கு தலைநகர் தமிழகம் தான்இவ்வாறு அமைச்சர் வைகைச் செல்வன் கூறினார்.

No comments:

Post a Comment