Sunday 26 May 2013

மதிப்பெண் பட்டியலுக்கு பணம் வசூலித்தால் நடவடிக்கை



               பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் பெறும் மாணவ, மாணவிகளிடம் பணம் வசூல் செய்யும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என மாவட்ட கல்வி அலுவலக நிர்வாகம் எச்சரித்துள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவு மே 9 ல்
வெளியானது. பெரியகுளம் கல்வி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகள் 26, அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள் 8, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் 7, கள்ளர் மேல்நிலைப்பள்ளி 1, ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளிகள் 2 உள்ளன. இவற்றில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு அந்தந்த பள்ளிகளில் நாளை(மே 27ம்தேதி) முதல் மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட உள்ளது. மதிப்பெண் பட்டியல்களை இலவசமாக வழங்குமாறு அரசு உத்தரவு உள்ளது.
                        
பெரியகுளம் கல்வி மாவட்டத்தில், கடந்த ஆண்டு சில பள்ளிகளில் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் மற்றும் டி.சி., வழங்கப்படும் போது, பணம் வசூலிக்கப்பட்டது. சபந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டது. தற்போது மாணவ, மாணவிகளிடம் மதிப்பெண் பட்டியல் வழங்கும்போது, பணம் வசூல் செய்யும் ஆசிரியர்கள் மற்றும் சம்பந்தபட்ட பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். என பெரியகுளம் கல்வி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது
.

No comments:

Post a Comment