Tuesday 7 May 2013

கடிகாரத்தை ஓட வைக்கும் பசு கோமியம்



            பசுவின் கோமியத்தில் இருந்து, மின் உற்பத்தி செய்து, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி பேராசிரியர், ரமேஷ் சரவணக்குமார் சாதனை படைத்து உள்ளார். இதுகுறித்து, கால்நடை மருத்துவக் கல்லூரி
முதல்வர், துரைசாமி மற்றும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள டாக்டர் ரமேஷ் சரவணக்குமார், ஆகியோர் கூறியதாவது: பத்து டம்ளர் கோமியத்தில், அதிக பட்சமாக, 7 வோல்ட் மின்சாரம் தயாரிக்கலாம். அந்த மின்சாரத்தில், ஒரே நேரத்தில் நான்கு சுவர் கடிகாரம், சிறு சிறு பல்புகளையும் (ஜீரோ வாட்ஸ்) எரியவைக்க முடியும். தொடர்ந்து, ஐந்து நாட்கள், அவை வேலை செய்யும். அதைத் தொடர்ந்து, கோமியத்தை மாற்றி, புதிய கோமியம் ஊற்றினால்,தொடர்ந்து மின்சாரம் தயாரிக்கலாம்.
                               
பத்து பிளாஸ்டிக் டம்ளர்களில், கோமியத்தை சேகரித்து வைத்துக் கொண்டு, ஜிங் தகடு மற்றும் காப்பர் தகடு ஆகியவற்றை ஒயரில் இணைத்து, கோமியத்தில் போட்டுவிட வேண்டும். கோமியத்தில் உள்ள யூரிக் அமிலம், செல்களில் உள்ள ஜிங் தகடு மற்றும் காப்பர் தகடு இடையே, எலக்ட்ரான்களில் ஓட்டத்தை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் மின்சாரம் உற்பத்தியாகிறது. இத்தகைய ஆராய்ச்சி, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு ஆர்வமூட்டக் கூடியது. இவ்வாறு, அவர்கள் கூறினர்
.

No comments:

Post a Comment