Saturday 4 May 2013

எம்.பில்., பிஎச்.டி., ஆய்வு பட்டம் - பல்கலைகளுக்கு யு.ஜி.சி., கிடுக்கிபிடி



             பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் எம்.பில்., மற்றும் பிஎச்.டி., ஆய்வு பட்டங்களை தரப்படுத்தும் வகையிலான சில கண்டிப்பான முடிவுகளை யு.ஜி.சி., மேற்கொண்டுள்ளது. இதனடிப்படையில், நாடு
முழுவதிலுமுள்ள மத்திய, மாநில, தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிடம், அவைகள் இதுவரை வழங்கிய எம்.பில்., மற்றும் பிஎச்.டி., பட்டங்கள் மற்றும் அவை வழங்கப்பட்ட விதம் ஆகியவை குறித்த விபரங்கள் கேட்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக மானியக் குழுவானது(UGC), கல்வி நிறுவனங்களிடமிருந்து தகவல்களைப் பெற்று, அதன்மூலமாக, அவற்றின் ஆராய்ச்சி செயல்பாடுகளை மதிப்பிட திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து UGC வட்டாரங்கள் கூறியதாவது: ஒரு பல்கலையில் ஆய்வுகளின் மூலமாக, எத்தகைய புதிய அறிவுநுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம். பெறப்படும் தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு, ஆராய்ச்சி மேம்பாட்டிற்கு பயன்படுத்தப்படும். இந்த நடவடிக்கை, தேவைப்படும் இடங்களில் செய்யப்படும் mid-course திருத்தங்களுடன் சேர்த்தே செய்யப்படும். நாட்டிலுள்ள 430க்கும் மேற்பட்ட பல்கலை துணைவேந்தர்களுக்கு எழுதிய கடிதத்தில் இந்த அறிவுரை கூறப்பட்டுள்ளது என்றன.
                          
படிப்பை முடித்தப்பிறகு, ஆராய்ச்சி மேற்கொள்பவர்கள், உண்மையான ஆய்வை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்களா? Thesis - சமர்ப்பிக்கும் முன்பாக, ஒரு முக்கிய ஜர்னலில் அவர்களின் ஆராய்ச்சி பேப்பர் வெளியிடப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதா? போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்க, பல்கலைகளுக்கு, 4 வாரங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அந்த Thesis, குறைந்தபட்சம் 2 நிபுணர்களால் மதிப்பாய்வு செய்யப்படுகிறதா (இருவரில், ஒரு நிபுணர், வெளி மாநிலத்தையோ அல்லது வெளிநாட்டையோ சேர்ந்தவராக இருக்க வேண்டும்) என்பது குறித்தும் கேட்கப்பட்டுள்ளதோடு, ஒவ்வொரு ஆராய்ச்சியாளரும், Thesis சமர்ப்பிக்கும் முன்பாக, Viva voce தேர்வை கட்டாயம் எழுதும் நடைமுறை உண்டா? என்பது குறித்தும் கேட்கப்பட்டுள்ளது. எம்.பில்., மற்றும் பிஎச்.டி., ஆராய்ச்சி நடைமுறைகளை UGC சில ஆண்டுகளுக்கு முன்பே வகுத்துவிட்டது. அந்த விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி, செயல்படுத்தும் பொறுப்பு, பல்கலைகளிடமே விடப்பட்டன. ஆனால், பல பல்கலைகள், அவற்றை தங்களின் வசதிக்கேற்ப மாற்றிக்கொண்டன. அதற்கேற்ப, ஒருவரின் ஆராய்ச்சி பேப்பர்கள், ஏதோ பெயருக்காக ஒரு ஜர்னலில் வெளியானால் போதும் என்று பல பல்கலைகள் ஏற்றுக்கொண்டன. மேலும், Thesis, வெளியிலிருந்து வரும் ஒரு நிபுணரால், கட்டாயம் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும் என்ற நிபந்தனையையும் பல பல்கலைகள் வலியுறுத்துவதில்லை
.

No comments:

Post a Comment