Monday 20 May 2013

தலைமை ஆசிரியர் பதவிக்கு கடும் போட்டி: முறைகேடு நடக்க அதிக வாய்ப்பு - நாளிதழ் செய்தி



              தலைமையாசிரியருக்கான பொது மாறுதல் கவுன்சலிங்கில், முக்கிய பள்ளிகளை பிடிப்பதில், ஆசிரியர்களிடையே போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. காலிப்பணியிடம் பட்டியல் வெளியிடாததால், முறையாக
நடக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், தெற்கு அரசு ஆண்கள், மகளிர், பரமத்தி ஆண்கள் மற்றும் மகளிர், செல்லப்பம்பட்டி, திருமலைப்பட்டி, எர்ணாபுரம், பழையபாளையம், திருச்செங்கோடு மகளிர், இறையமங்கலம், குமாரபாளையம் மகளிர், ராசிபுரம் அண்ணாசாலை மற்றும் சிவானந்தா சாலை, தோ.ஜேடர்பாளையம், நாமகிரிப்பேட்டை ஆண்கள், முத்துகாப்பட்டி, பாலப்பட்டி ஆகிய, 17 மேல்நிலைப்பள்ளிகளில், தலைமையாசிரியர் காலிப்பணியிடம் உள்ளது. அதில், பரமத்தி மகளிர் பள்ளி தலைமை ஆசிரியர், டி..., பதவி உயர்விலும், எர்ணாபுரம் அரசு பள்ளி ஹெச்.எம்., பதவி உயர்வு, நாமக்கல் மகளிர் மற்றும் செல்லப்பம்பட்டி பள்ளி தலைமை ஆசிரியர், பணி ஓய்வும் பெற்றனர். திருமலைப்பட்டி தலைமை ஆசிரியர், வி.ஆர்.எஸ்.,ல் சென்றுவிட்டார். மற்ற பள்ளிகளில் காலிப்பணியிடம் நீடித்து வருகிறது.
                           
அப்பணியிடங்களை நிரப்புவதற்கான பொது மாறுதல் கவுன்சலிங், நாளை (மே 20), நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடக்கிறது. முக்கிய பள்ளிகளை பிடிக்க, ஆசிரியர்கள் மத்தியில், கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், ஆன்லைன் கவுன்சலிங் முறையாக நடக்குமா என்பது சந்தேகம் எழுந்துள்ளது. காரணம், காலிப்பணியிடம் குறித்த விபரங்களை, கவுன்சலிங் துவங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன் வெளியிட வேண்டும். ஆனால், இதுவரை, காலிப்பணியிடம் குறித்த விபரங்களை, வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அதனால், முக்கிய பள்ளிகளை, "பிளாக்" செய்து வெளியிட வாய்ப்பு அதிகம் உள்ளது. அதன் மூலம், முறைகேடு நடக்கும் என, குற்றம் சாட்டப்படுகிறது.
                        
எவ்வித ஒளிவு மறைவும் இன்றி, நேர்மையான முறையில், பள்ளித் தலைமையாசிரியருக்கான கவுன்சலிங் நடத்தினால், தகுதியானவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், வாய்ப்பு கிடைக்கும். ஆனால், காலிப்பணியிடம் குறித்த பட்டியல் வெளியிடாததால், பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: ஒவ்வொரு  ஆண்டும், இடமாறுதல் கவுன்சலிங், சென்னையில் நடந்து வந்தது. கடந்த ஆண்டு முதல், ஆன்லைன் மூலம் கவுன்சலிங் நடத்தப்படுவதால், ஆசிரியர்களுக்கு எவ்வித சிரமம் இல்லை. இது வரவேற்கத்தக்க ஒன்று. நாளை (மே 20), முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான, பொது இடமாறுதல் கவுன்சலிங் நடக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில், 17 பள்ளிகளில், தலைமையாசிரியர் காலிப்பணியிடம் உள்ளது.
                           
கவுன்சலிங் நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன், காலிப்பணியிடம் குறித்த விபரங்களை வெளியிட வேண்டும். ஆனால், இதுவரை அப்பட்டியலில் வெளியிடாததால், முறையாக நடக்குமா என்பது சந்தேகமே. அதிலும், முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்
.

No comments:

Post a Comment