Saturday 11 May 2013

ஐந்தாம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி கூடாது: இந்திய கம்யூனிஸ்ட்



                          "ஐந்தாம் வகுப்பு வரை, ஆங்கில வழி கல்வியை அமல்படுத்தக்கூடாது, தாய் மொழியான தமிழ்வழி கல்வியைத் தான் அமல்படுத்த வேண்டும்" என இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.., குணசேகரன் வலியுறுத்தினார். சட்டசபையில், அவர் பேசியதாவது: அரசு பள்ளிகளில்,
மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. இதில், அரசு கவனம் செலுத்த வேண்டும். ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, தாய் மொழியான தமிழ் வழி கல்வியே, அமலில் இருக்க வேண்டும்; இதே நடைமுறையை, தொடர்ந்து அமல்படுத்த வேண்டும். ஆங்கில வழி கல்வி கூடாது. உடற்கல்வி மீது, சிறப்பு கவனம் செலுத்தும் வகையில், தனி இணை இயக்குனரை நியமிக்க வேண்டும் என, உடற்கல்வி ஆசிரியர் வலியுறுத்துகின்றனர்
                                    வைகைச்செல்வன்-பள்ளிக்கல்வி அமைச்சர்: இந்த கோரிக்கை, அரசின் பரிசீலனையில் உள்ளதுகாங்கிரஸ்-ஜான் ஜேக்கப்: அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர் அல்லாத பணியிடங்கள், அதிகளவில், காலியாக உள்ளன. இதனை நிரப்ப, நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு, தற்போது, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமலில் உள்ளது. இதனை மாற்றி, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.

No comments:

Post a Comment