Tuesday 14 May 2013

ஐ.டி.ஐ.களில் அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் லேப்–டாப் சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.



             2 லட்சத்து 24 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு பெறுவதற்கான திறன் பயிற்சி:நடப்பு ஆண்டில், 18 துறைகளில், 2 லட்சத்து 24 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு பெறுவதற்கான திறன் பயிற்சி வழங்கப்படும், .டி..களில்
பயிற்சி பெறும் அனைத்து தொழிற்பிரிவு  மாணவர்களுக்கும்  லேப்டாப் வழங்கப்படும் என்று, சட்டசபையில் முதல்அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.
ஒரு ஆண்டு பட்டயபடிப்பு தொழிலாளர் சட்டங்கள் மற்றும் நிர்வாகவியல் சட்டங்களை மனித வள மேலாண்மை மற்றும் தொழிலுறவு அலுவலர்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள உதவும் வகையில் ‘‘தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும்’’ என்ற ஓராண்டு பகுதி நேர பட்டயப் படிப்பு நடப்பு கல்வி ஆண்டில் தொடங்கப்படும். பணியில் உள்ளவர்கள் பயனடையும் வகையில், இப்பட்டயப் படிப்புக்கான வகுப்புகள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் நடைபெறும். இப்படிப்பில் 50 பேர் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
.டி..மாணவர்களுக்கு
                        
தொழில் திறன் மற்றும் அறிவுத் திறன் ஆகியவற்றை உருவாக்குவதில் .டி.கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் .டி.களில் பயிற்சி பெற்று வரும் பயிற்சியாளர்களுக்கும் .டி.. பாடத் திட்டத்தின்படி வெளியிடப்படும் கருத்தியல் பாடப் புத்தகங்கள், செய்முறை விளக்கப் பாடப் புத்தகங்கள், பயிற்சிப் பாடப் புத்தகங்கள். கணித பாடப் புத்தகங்கள், வரை பட பாடப் புத்தகங்கள், வரை பட விளக்க செய்முறை பாடப் புத்தகங்கள், ஆங்கில புலமை மற்றும் பேச்சாற்றலை வளர்க்கும் பணித் திறன் வளர்ப்பு பாடப் புத்தகங்கள் மற்றும் மாணவர்கள் பொறியியல் வரை படங்களை வரைவதில் தக்க பயிற்சி பெற தேவையான உபகரணங்கள் ஆகியவை வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கென 2 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும். இதன் மூலம் அரசு .டி.களில் பயிலும் சுமார் 26,000 பயிற்சியாளர்கள், அரசு உதவிப் பெறும் .டி.களில் பயிலும் சுமார் 1,683 பயிற்சியாளர்கள் என மொத்தம் 27,683 பயிற்சியாளர்கள் பயன்பெறுவர்.
                   
வேலைக்கு தகுதி பெறும் திறனை அதிகரிக்கும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள .டி.களில் அனைத்து தொழிற் பிரிவுகளிலும் பயிற்சி பெறுவோருக்கான பாடத் திட்டத்தில் மொழித் திறன், கணினித் திறன் மற்றும் மென் திறன் பயிற்சி குறித்த பாடப் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இத்தகைய பயிற்சிகளுக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு, அனைத்து அரசு ஐடிஐகளிலும் மொழி மற்றும் மென் திறன் ஆய்வகங்கள் 15 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். இந்த ஆய்வகங்களை அமைக்க தேவைப்படும் இடங்களில் புதிய கட்டடம், மொழித் திறன் பயிற்சிக்கான மென்பொருள், கணிப் பொறிகள் மற்றும் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் ஆகியவற்றிற்கான செலவினங்கள் இதில் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் சுமார் 25,231 அரசு தொழிற் பயிற்சி நிலைய பயிற்சியாளர்கள் பயன்பெறுவர்.
லேப்டாப்
                    
அரசு ஐடிஐகளில் தற்போது கணிப்பொறி தொடர்புடைய பிரிவுகளில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மட்டும் மடிக்கணினி (லேப்டாப்) வழங்கப்பட்டு வருகிறது. கணிப்பொறி அல்லாத பிற தொழிற் பிரிவுகளில் பயிலும் .டி. மாணவர்கள் அனைவருக்கும் கணிப்பொறி பயிற்சி பெறுவது தற்போது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதாலும், அரசு கல்லூரிகள், மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஆகியோருக்கு அவர்கள் படிக்கும் பாடப் பிரிவுகளைக் கணக்கில் கொள்ளாமல் அனைவருக்கும் மடிக்கணினி வழங்கப்படுவதாலும், இதே அடிப்படையில், ஐடிஐகளில் பயிற்சி பெறும் அனைத்து தொழிற் பிரிவு மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படும். இதற்கென 35 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அரசு ஐடிஐகளில் பல்வேறு தொழிற் பிரிவுகளில் தொழிற் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு பயிற்சிக் காலத்தில் பேருந்து பயணச் சலுகை, 500 ரூபாய் மாத உதவித் தொகை, விலையில்லா மிதி வண்டி, 2 செட் சீருடை, 1 ஜோடி காலணி போன்ற சலுகைகள் அளிக்கப்படுகின்றன.
                                  
பள்ளிகளை பொறுத்தவரை அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்படுவதைப் போல, அரசு ஐடிஐ மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளான பேருந்து பயண சலுகை, 500 ரூபாய் மாத உதவித் தொகை, விலையில்லா மிதிவண்டி மற்றும் மடிக்கணினி ஆகியவை, இனி அரசு உதவி பெறும் தனியார் ஐடிஐ மாணவர்களுக்கும் வழங்கப்படும். இதற்கென 3 கோடியே 7 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். இதன் மூலம் ஆண்டொன்றுக்கு சுமார் 1,683 பேர் பயன் பெறுவர்.
மகளிருக்காக...
                       
தொழிற் பயிற்சி பெறுவதில் மகளிர் சிரமமின்றி பங்கு பெற வேண்டும் என மகளிருக்காக தனியாக 12 அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றன. இதில் 2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கரூர் மகளிர் அரசு தொழிற் பயிற்சி நிலையம் இன்று வரை வாடகைக் கட்டடத்தில் வசதி குறைவுடன் இயங்கி வருகிறது. மகளிர் சிரமமின்றி தொழிற் பயிற்சி பெறும் வகையில், கரூர் மகளிர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்திற்கு ஆய்வுக்கூடம், வகுப்பறை, அலுவலக அறை, நு£லக அறை ஆகிய வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் 2 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.
வேலைவாய்ப்புத்திறன்
                              
தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கான திறன் பயிற்சி வழங்கும் நோக்கில் இயங்கி வருகின்ற தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்ககம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநரகக் கட்டடத்தில் ஒரு பகுதியில் இயங்கி வருகிறது. திறன் பயிற்சிகளை வழங்குவதற்கு அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு, கிண்டி, மகளிர் அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் தற்போது கட்டப்பட்டு செயல்பட்டு வரும் கட்டடத்தின் மேல் கூடுதலாக இரண்டு தளங்கள் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கக அலுவலகத்திற்கு 3 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.
2,24,000
பேருக்கு
                 
இது மட்டுமல்லாமல், அரசின் பல்வேறு துறைகளால் செயல்படுத்தப்படும் அனைத்து திறன் எய்தும் பயிற்சிகளுக்கு ஒருங்கிணைவு முகமையாக செயல்படும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு மையத்தின் மூலம், அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தரக்கூடிய சில்லறை வர்த்தகம், உபசரிப்பு மேலாண்மை, மருத்துவ சேவைகள், தானியங்கி, கட்டுமானம், ஓட்டுநர் பயிற்சி, பாதுகாவலர் பணிகள், தோல் மற்றும் தோல் பொருள்கள், ஜவுளி, தகவல் தொழில் நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள், திறன் எய்தும் பயிற்சி, கைபேசி பழுது பார்த்தல், பற்ற வைத்தல், பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு, கனரக பொறியியல், உணவு பதனிடுதல், வங்கி மற்றும் நிதி சேவைகள், ஆபரணக் கல் மற்றும் நகை தயாரித்தல் போன்ற 18 துறைகளில் நடப்பாண்டில் 2 லட்சத்து 24 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு பெறுவதற்கான திறன் பயிற்சி வழங்கப்படும். மேற்காணும் நடவடிக்கைகள் தொழில் திறன் மேம்பட்டு, வேலை வாய்ப்புகள் கிடைக்கவும், அறிவு சார்ந்த மனித வள சமுதாயம் உருவாகவும், தொழில் அமைதி உருவாகவும் வழிவகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்அமைச்சர் ஜெயலலிதா கூறினார்
.

No comments:

Post a Comment