Saturday 25 May 2013

தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம்



            தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின், மாவட்ட செயற்குழு கூட்டம், நாமக்கல் அடுத்த எலச்சிபாளையத்தில் நடந்தது. மாவட்டத் தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார். மோகனூர் வட்டார
பொருளாளர் செல்வக்குமார் வரவேற்றார். செயலாளர் நடேசன் அறிக்கை வாசித்தார். மாவட்டத் துணைச் செயலாளர்கள் நாகராஜன், சரவணகுமார், சேந்தை வட்டாரச் செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், தமிழக ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு, 2013ம் ஆண்டு ஜனவரி, 1 முதல், எட்டு சதவீதம் அகவிலைப்படி அறிவித்து, நிலுவைத் தொகையை ரொக்கமாக பெற்றுக் கொள்ள உத்தரவிட்ட, தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
              தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் குறைகளை களைய அமைக்கப்பட்ட மூன்று நபர் கமிஷன் முடிவுகளை உடனடியாக வெளியிட்டு, ஆசிரியர்களின் குறைகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் முற்றிலும் ரத்து செய்யவேண்டும். மே, 28, 29 மற்றும், 30 ஆகிய தேதிகளில் நடக்கும் நடுநிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள் இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு, பட்டதாரி ஆசிரியர் கவுன்சலிங், எவ்விதமான அரசியல் தலையீடும் இன்றி, நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்க, தேவையாவ வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்
.

No comments:

Post a Comment