Sunday 12 May 2013

ஐந்தாண்டு சாதனையை இழந்த ஈரோடு: தூங்கும் கல்வி துறை - நாளிதழ் செய்தி



            ஐந்தாண்டுக்கு மேலாக மாநில அளவில் ரேங்க்கை தக்க வைத்த ஈரோடு மாவட்டம், கல்வித்துறை அதிகாரிகளின் மெத்தனத்தால், இந்தாண்டு கோட்டை விட்டதாக, தலைமை ஆசிரியர்கள் வருத்தம் தெரிவித்தனர். ஈரோடு மாவட்டத்தில், கடந்த, 2010, ஆகஸ்ட், 5ம் தேதி வரை
சி...,வாக இருந்த பொன்குமார், பொது தேர்வுகளில் மாநில அளவில் இடம்பிடிக்க பல்வேறு நடவடிக்கை எடுத்தார். அதன்பின், 2010, அக்டோபர், 14 முதல், 2011 டிச., 1ம் தேதி வரை, மாவட்ட சி...,வாக, வை.குமார் பொறுப்பேற்று, பொன்குமார் எடுத்த நடவடிக்கையை புறக்கணிக்காமலும், பொது தேர்வில் மாநில தேர்ச்சி என்ற குறிக்கோளுடனும் செயலாற்றினார். கடந்த, 2005-06 கல்வியாண்டு ப்ளஸ் 2 தேர்வில், ஈரோடு மாவட்ட அரசு மேல்நிலை பள்ளிகள், 95.32 சதவீதமும், மெட்ரிக் பள்ளிகள், 96.44 சதவீதமும் எடுத்தது. 2006 -07ம் கல்வியாண்டில் அரசு பள்ளிகள், 97.17 சதவீதமும், மெட்ரிக் பள்ளிகள், 97.93 சதவீதமும், 2007-08ல் அரசு பள்ளிகள், 98.40 சதவீதமும், மெட்ரிக் பள்ளிகள், 97.66 சதவீதமும் எடுத்தது.
                           
இந்நிலையில், மீண்டும் ஈரோடு மாவட்ட சி...,வாக பொன்குமார் பொருப்பேற்ற பின், மெட்ரிக் பள்ளிகள், 98.20 சதவீதமும், அரசு பள்ளிகள், 98.98 சதவீதமும் பெற்றது. அதாவது தனியார் மெட்ரிக் பள்ளியை காட்டிலும், அரசு பள்ளிகள் 0.78 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தது. அடுத்த கல்வி ஆண்டான, 2009 -10 கல்வியாண்டிலும் மெட்ரிக் பள்ளிகள், 98.74 சதவீதமும், அரசு பள்ளிகள், 98.84 சதவீதமும் எடுத்தது. தனியார் பள்ளியை பின்னுக்கு தள்ளி, அரசு பள்ளிகள், 0.10 சதவீதமாக அதிகரித்தது. இவர்களை தொடர்ந்து, 2011, டிசம்பர், 1ம் தேதி மாவட்ட சி...,வாக ராஜராஜன் பொறுப்பேற்றார். இவர் பொறுப்பில் இருந்த போது, ப்ளஸ் 2 தேர்வில் மாநில அளவில், ஈரோடு மாவட்டம் மூன்றாமிடம் பெற்றது. இவரது இடமாற்றத்துக்கு பின், 2012, மே மாதம், மாவட்ட சி...,வாக ஸ்ரீதேவி பொறுப்பேற்றார். முன்பிருந்த சி...,க்களின் வழிமுறையை பின்பற்றாமல், தனக்கென ஒரு வழிமுறை, அணுகுமுறையை பின்பற்றினார். இவரது அணுகுமுறையால், கல்வித்துறை தொடர் பின்னடைவை சந்தித்து வந்தது.
                        
ப்ளஸ் 2 தேர்வில், ஒரு மாநில ரேங்கை கூட தக்க வைக்க முடியாத அவல நிலைக்கு, ஈரோடு மாவட்டம் தள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது: கடந்த, 2012ல் சி...,வாக பொறுப்பேற்ற ஸ்ரீதேவி, முன்னாள் அதிகாரிகளின் வழிமுறையை பின்பற்றாமல், தன்போக்கில் செயல்படுவதால், கல்வித்துறை பின்னடைவை சந்தித்தது. ஐந்தாண்டாக மாநில ரேங்கை தக்க வைத்த ஈரோடு மாவட்டம், இந்தாண்டு மாநில ரேங்க்கை இழந்தது. இனி வரும் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்விலாவது, மாநில ரேங்க்கை ஈரோடு மாவட்டம் தக்க வைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கல்வித் துறையிலும், கல்வி வழிமுறையிலும் மாற்றங்களை பின்பற்ற வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பாக உள்ளது, என்றனர்
.

No comments:

Post a Comment