Tuesday 14 May 2013

PG TRB 2012 தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 23, 24–ந்தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு


Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012 - 2013 - NOTIFICATION CLICK HERE


                       முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வரலாறு, பொருளாதாரம், வணிகவியல் பாடப்பிரிவுகளில் தமிழ்வழி ஒதுக்கீட்டின் கீழ் புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 23,
24–ந் தேதிகளில் சென்னை உள்பட 7 இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம்வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–  தமிழ்வழி முன்னுரிமை இடங்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் (கிரேடு–1) நியமனத்திற்கான (2011–2012) போட்டித்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தங்கள் விண்ணப்பத்தில் தமிழ்வழியில் படித்ததற்கான முன்னுரிமை கோரியவர்கள் 3.8.2012 மற்றும் 30.10.2012 ஆகிய தேதிகளில் நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்புகளில் வரலாறு, பொருளாதாரம், வணிகவியல் பாடங்களில் தமிழ்வழியில் ஒதுக்கப்பட்ட பணி இடங்களுக்கு அழைக்கப்பட்டனர். அப்போது, பெரும்பாலான தேர்வர்கள், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2, இளநிலை பட்டம், முதுகலை பட்டம், பி.எட். பட்டம்ஆகியவற்றை முற்றிலும் தமிழ்வழியில் படித்ததற்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்கவில்லைஇதனால், வரலாறு, பொருளாதாரம் மற்றும் வணிகவியல் பாடங்களின் தமிழ்வழி முன்னுரிமை பணி இடங்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தால்நிரப்ப இயலவில்லை
சான்றிதழ் சரிபார்ப்பு 
                              எனவே, மீதமுள்ள தேர்வர்களில் விண்ணப்பத்தில் தமிழ்வழி என்று குறிப்பிட்டுள்ளவர்களில் வரையறுக்கப்பட்ட மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டும் பாடவாரியாக சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்போது ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. சான்றிதழ் சரிபார்ப்பு கீழ்க்கண்ட இடங்களில் 23, 24–ந் தேதிகளில் நடைபெறுகிறது.
 1.
சென்னைபாத்திமா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, 5, போலீஸ் லேன், சைதாப்பேட்டை, சென்னை– 15
 2.
விழுப்புரம்அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, விழுப்புரம்
3.
சேலம்ஜெயராம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நெத்திமேடு, சேலம்– 2
4.
கோவைநல்லாயன் உயர்நிலைப்பள்ளி, கோவை– 1
 5.
மதுரைசாய்ராம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எம்..கே.சாலை, மதுரை– 2 6. திருநெல்வேலிரோஸ்மேரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வி.எம்.சத்திரம், பாளையங்கோட்டை
 7.
திருச்சி.டி.எம்.ஆர்.சி.எம். வாசவி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 11, பேர்ட்ஸ் சாலை, கன்டோன்மென்ட், திருச்சி.
யார் யாரிடம் சான்று? 
                   தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்ப்பின்போது, வரலாறு, பொருளாதாரம், வணிகவியல் பாடங்களில் தமிழ்வழியில் படித்ததற்கான சான்றிதழ்களை மேலொப்பம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். அரசியல் அறிவியல் பாடத்திற்குரிய பின்னடைவு பணி இடங்களுக்கு (பேக்லாக் வேகன்சி) தகுதி உள்ள தேர்வர்களுக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட உள்ளதுஅவர்களின் விவரம் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in ) வெளியிடப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு கல்வித்தகுதிக்கும் யார் யாரிடம் சான்று பெற வேண்டும் என்ற விவரம் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது
எஸ்.எஸ்.எல்.சி. – பள்ளி தலைமை ஆசிரியர் 
பிளஸ்–2 – பள்ளி தலைமை ஆசிரியர் 
இளங்கலை பட்டம்கல்லூரி முதல்வர் அல்லது பல்கலைக்கழக பதிவாளர் 
முதுகலை பட்டம்கல்லூரி முதல்வர் அல்லது பல்கலைக்கழக பதிவாளர் 
பி.எட். பட்டம்பல்கலைக்கழக பதிவாளர் மட்டும் 
                         சான்றிதழ் சரிபார்ப்பின்போது, தமிழ்வழியில் படித்ததற்கான உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்காத பட்சத்தில் தமிழ்வழி முன்னுரிமை பணி இடத்திற்கு தேர்வர்கள் தகுதியற்றவராக கருதப்படுவார்.  3.8.2012 மற்றும் 30.10.2012 அன்று நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பின்போது, மேற்கண்டவாறு தமிழ்வழியில் படித்தற்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்காதவர்கள் தற்போது உரிய சான்றிதழ்கள் பெற்றிருந்தால் அவர்கள் 27–ந் தேதி அன்று சென்னையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment