Friday 28 June 2013

பிளஸ்-2 வகுப்புகளில் ஒரு பிரிவுக்கு 50 மாணவர்கள் மட்டுமே! கல்வித்துறை உத்தரவு



                      பிளஸ்-2 வகுப்புகளில் ஒரு பிரிவுக்கு 50 மாணவர்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்று மெட்ரிக் பள்ளிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்
காரணமாக, மெட்ரிக் பள்ளிகளில் ஒரு வகுப்புக்கு 4 பிரிவுகள் இருக்க வேண்டும். 5வது பிரிவை வைக்க வேண்டுமானால் அனுமதி வாங்க வேண்டும். அதற்கு மேல் எக்காரணம் கொண்டும் பிரிவுகள் கூடுதலாக இருக்கக்கூடாது என கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இது தொடர்பாக பள்ளிகளில் ஆய்வு நடத்தி இந்த உத்தரவை அமல்படுத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment